2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வயல் நிலங்களை நிரப்புவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு அடுத்த வாரம் சாய்ந்தமருதுக்கு வி

Super User   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சாய்ந்தமருது மேட்டு வட்டை பிரதேசத்திலுள்ள வயல் நிலங்களை நிரப்புவது தொடர்பில் ஆராய்வதற்கு; நியமிக்கப்பட்ட குழு அடுத்த வாரம் சாய்ந்தமருது பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கமநல சேவைகள் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறித்த இடத்திற்கு நேரடி விஜயம் மேற்கொள்ளும் இக்குழுவினர் காணி உரிமையாளர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்தே குழுவின் அறிக்கை கமநல சேவைகள் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவிடம் கையளிக்கப்படும் என உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கினங்க கமநல சேவைகள் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவினால் குறித்த குழு கடந்த செவ்வாய்கிழமை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் காணி மற்றும் வன விலங்குகள் அமைச்சின் ஆலோசனை குழுக்கூட்டத்தின் போது நியமிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொது செயலாளர் நிசாம் காரியப்பர் மற்றும் குறித்த காணிகளை உரிமையாளர்களை உறுப்பினர்களாக கொண்ட அல் - அமானா நலன்புரி அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • jaleel kwt Saturday, 24 September 2011 07:07 PM

    ஆஹா இது நல்ல காரியம் நன்றி.

    Reply : 0       0

    mca fareed Saturday, 24 September 2011 08:48 PM

    ஆஹா நிசாம் காரியப்பருக்கு, இவ்வளவு பெரிய அக்கறை எங்கிருந்து வந்ததோ எல்லா மாசாலமும் வாற மாதத்தோட முடிஞ்சிரும் அப்புறம்...நீ யாரோ...நான் யாரோ..

    Reply : 0       0

    ar.nila Sunday, 25 September 2011 03:09 AM

    தொடந்து seiyevum

    Reply : 0       0

    sahan Monday, 26 September 2011 03:57 AM

    நன்றி ஜமீல் சார் ...............

    Reply : 0       0

    Sanoon Mohideen Tuesday, 27 September 2011 07:37 AM

    நன்றி ஹகீம் சேர் என்று சொல்ல மனசு வரலியே... ஒருவருக்கும்... நன்றி தலைவரே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .