2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் ஈரான் பயணம்

Super User   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பலஸ்தீன் தனி நாட்டுக்கான அங்கீகாரம் வழங்கள் தொடர்பாக நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் நாளை வெள்ளிக்கிழமை ஈரான் செல்லவுள்ளார்.

இம்மாநாடு எதிர்ரும் ஒக்டோபர் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் ஈரானின் தெஹ்ரான் நகரில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதியாக செல்லும் ஜெமீல், இம்மாநாட்டில் விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளார்.

இம்மாநாட்டில் இலங்கை சார்பாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • poraali Thursday, 29 September 2011 09:53 PM

    இவருக்கு இது ரொம்ப பெரிசு.....

    Reply : 0       0

    Nafeel Thursday, 29 September 2011 10:30 PM

    போறதென்னவோ உண்மைதான். விசேட உரை செய்யுறாரா என்று பின்ன பார்ப்பம்.

    Reply : 0       0

    mohamed Thursday, 29 September 2011 10:47 PM

    நல்ல பகடி

    Reply : 0       0

    kulathooran Thursday, 29 September 2011 11:49 PM

    நமது எம்.பி.யும் இளைஞர் தானே? ஏன் எம்.பி.க்கு இல்லாத மவுசு மாகாண சபை உறுபினருக்கு ?

    Reply : 0       0

    razeek kalmunai Friday, 30 September 2011 01:28 AM

    எலக்சன் முடியு மட்டும் ஈரானில் இருந்தால் .....

    Reply : 0       0

    UMMPA Friday, 30 September 2011 01:28 AM

    என்ன இப்படி சிந்திக்கிறது! நீங்களும் இப்படி போக முடியும் அதற்கு?

    Reply : 0       0

    padiththavan Friday, 30 September 2011 08:23 AM

    தென்கிழக்கு பல்கலைக்கழகம் வேண்டும் என்று அன்று இவர் முன்மொழிந்தபோதும் இப்படித்தான் பகடி பண்ணினார்கள் ஆனால் யார் மறந்தாலும் மறைக்க முடியாத உண்மை சாதித்து காட்டினர். ஒருத்தனின் முயட்ட்சியைப்பார்த்து பொறாமை கொள்வது எமது ஈமானை yerikkaatha? சிந்தியுங்கள் நண்பர்களே.

    Reply : 0       0

    Avan Friday, 30 September 2011 03:59 PM

    நல்ல வேலை ஏன்னா?

    Reply : 0       0

    pasha Friday, 30 September 2011 05:48 PM

    அப்போ தென் கிழக்கு பல்கலைக்கழகம் கட்டியவர் இவர் தானா அஷ்ரப் இல்லையா?

    Reply : 0       0

    padiththavan Friday, 30 September 2011 09:24 PM

    மறைந்த தலைவர் அஷ்ரப் உடன் நின்று முழு மூச்சாக உழைத்தவர் pasha அவர்களே, எதற்கும் ஒரு முயற்சி வேண்டும் இல்லியா? சுயநலமாக சிந்தித்தால் சரித்திரங்கள் கசப்பாகத்தான் இருக்கும்.

    Reply : 0       0

    issadeen Friday, 30 September 2011 09:43 PM

    படித்தவனின் கமெண்ட்ஸ் முற்றிலும் உண்மை ஏனெனில் மறைந்த மாமேதை அஷ்ரப் இவரை அப்போது யூனிவர்சிட்டி ஜமீல் என்று தான் அழைப்பார். இவரின் பலம் தற்போதய தலைவருக்கு தெரியாதா என்ன?

    Reply : 0       0

    mca fareed Saturday, 01 October 2011 01:37 AM

    இப்படியும் ஒரு பகடிதான்

    Reply : 0       0

    IBNU ABOO Saturday, 01 October 2011 02:24 AM

    ஒருவருக்கு கிடைத்த இப்படியான வாய்ப்பு அல்லாவால் கொடுக்கப்பட்டதென்று என்ன வேண்டும். அவரும் இதை அனுபவிக்கட்டுமே. மனிதர் மனங்கள் நோக பேசாதீர்கள். மர்ஹூம் மேதை அஷ்ரப் அவர்களை இந்நிகழ்வுக்கு அனுப்ப தெரிவு செய்தாலும் அதற்கும் நக்கல் பண்ண ஆயிரம் பேர் நம்மில் உண்டு.

    Reply : 0       0

    Amjath ULM Saturday, 01 October 2011 05:56 AM

    இப்னுஅபூ, படித்தவன், இஸ்ஸதீன் போன்றோரின் கருத்துக்கள் சிறப்பாக, நியாயமான, முஸ்லிம்களுக்குரிய பண்பை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
    ஒரு உண்மையை சொல்லவேண்டும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல் வாதிகளில் அதிகம் படித்தவர் சகோதரர் ஜெமீல் மாத்திரமே என்பபதை அதிகம் பேர் அறிவர்.....

    Reply : 0       0

    Riyal A.M Saturday, 01 October 2011 04:54 PM

    வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    mca fareed Saturday, 01 October 2011 05:31 PM

    ஆட்கள் தட்டுப்பாடு நிலவுதுபோல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .