2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'கல்முனை மாநகர சபை தேர்தலில் அரசாங்கம் அடையவுள்ள படுதோல்விக்கு இரு அமைச்சர்களே காரணம்'

Super User   / 2011 ஒக்டோபர் 01 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அடையவுள்ள படுதோல்விக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற அமைச்சர்களான றிசாட் பதியுதீன் மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோரே பொறுப்பாளிகள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை தேர்தலில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெறப்போகின்ற வெற்றி முழு இலங்கையிலும் வாழும் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் வெற்றியாகும் என அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கல்முனையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற பிரச்சார கூடத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடந்து உரையாற்றி அவர்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் விருப்பத்திற்கு மாறாக கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு படுதோல்வியடையும்.

இதற்கு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற அமைச்சர்கள் இருவருமே பொறுப்பாளிகளாவார்கள். கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற போகின்ற மாபெரும் வெற்றி எந்தவிதத்திலும் நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு சவாலாக அமைய போவதில்லை.

ஆனால் ஜனாதிபதியின் ஆட்சியின் கீழிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற ஓரிரு அமைச்சர்கள் இந்த தேர்தல் சவாலாக அமையப் போகின்றது என தெரிவிக்கின்றனர்.

இந்த அமைச்சர்களின் தலையீடு இல்லாமலிருந்திருந்தால் கல்முனை மாநகர சபை தேர்தலில் மர சின்னத்தின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் போட்டியிட்டிருப்பார்கள். இதனால் அவர்களும் வெற்றியின் பங்காளிகளாக இருந்திருப்பார்கள்.

கல்முனை மாநகர சபை தேர்தலில் மூன்றாவது சக்தியாகவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு அளிக்கின்ற வாக்குகள் அனைத்தும் முஸ்லிம் சமுகத்தின் அரசியல் இலக்கை சிதைக்கின்ற வாக்குகளாக அமைய போகின்றது என்பதனை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

கல்முனை மாநகர சபை தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் நான்கு தடவைகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். இந்த பேச்சுவார்த்தையிலே ஜனாதிபதி மிகுந்த திறந்த மனதோடு கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவத்தை பாதுகாப்பதற்காக மர சின்னத்தில் போட்டியிடலாம்.

எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் மூன்று பேரை இணைத்துக் கொள்ளும் படி என்னிடம் கேட்டு கொண்டார்.
ஆனால் அந்த விடயம் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு மாற்றமாக இன்று வெற்றிலை சின்னத்தில் போட்டியிட களம்  இறங்கியுள்ளார்கள். இது ஒருபோதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பமாக இருக்கவில்லை என்பது மிக தெளிவாகின்றது என்றார்.

இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் தலைமை வேட்பாளர் நிசாம் காரியப்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • rifas Sunday, 02 October 2011 04:23 AM

    வெற்றி நிச்சயம்.

    Reply : 0       0

    kalmunai sainthamaruthu Monday, 03 October 2011 04:08 PM

    முதலில் அதிக வோட்ஸ் எடுத்து காட்டடட்டும் சிரஸ் அல்லது நிஜாம் காரியப்பர். அதுக்கு பிறகு பார்க்கலாம் மேயர் யார் என்பதை.

    Reply : 0       0

    rozan Monday, 03 October 2011 05:54 AM

    சிராஸ் வெல்வது நிட்ச்சயம்....... இந்த முறை சாய்ந்தமருது மக்கள் ஏமாந்து போக மாட்டார்......

    Reply : 0       0

    ruzny Monday, 03 October 2011 12:25 AM

    காங்கிரஸ் இப்படி போனேதுக்கு நீங்கள்தானே கரணம் ஐயா....

    Reply : 0       0

    AHAMED JUNAID Monday, 03 October 2011 12:00 AM

    கட்சி உட்பூசல்களும் போட்டா போட்டிகள் அதிகரிதுள்ளதாலும் இலங்கை தமிழரசு கட்சிலிருந்து ஒருவர் கல்முனை நகரை ஆளப்போகின்றார். இதுதான் நடக்கப்போகின்றது.

    Reply : 0       0

    razeek kalmunai Sunday, 02 October 2011 09:24 PM

    முஹம்மத் ரினோஸ்.... நிசாம் காரியப்பர் மூத்த போராளி என்றால் முழக்கம் மஜீத் .........?

    Reply : 0       0

    கட்சியின் காவலன் Sunday, 02 October 2011 07:07 PM

    கட்சியின் தலைவர் எல்லோரையும் சமமாக மதிக்க வேண்டும். மக்கள் தீர்மானிக்கட்டும் யார் மேயர் என்பதை. மாறாக கட்சி தீர்மானிக்கும் என்று சொல்வது தலைமை சொல்வது அழகல்ல. அப்படியென்றால் எதற்காக ஒரு தேர்தல் நடத்த வேண்டும்? இந்தத் தேர்தலில் யாரையும் யாரும் ஏமாற்றலாம் என்று நினைத்தால் அதைவிட ஒரு வங்குரோத்து அரசியல் எதுவுமே இருக்காது. கட்சி வாழ வேண்டுமா அல்லது மரனிக்க வேண்டுமா என்பதை கட்சித் தலைமைகள் தீர்மானிக்கும் தேர்தலாகவே மக்கள் கருதுகின்றனர். சதிகாரர்களுக்கெல்லாம் மாபெரிய சதிகாரன் இருப்பதை தலைமைகள் புரியட்டும்.

    Reply : 0       0

    oor kuruvi Sunday, 02 October 2011 06:45 PM

    சகோதரர்களே யாரும் குழம்பாதிங்க. சகல வேறுபாடுகளையும் நாம் அகற்றி இஹ்லாசொடு செயற்படுங்கள். வெற்றி நிச்சயம். ஆனால் ஒன்று பொருத்தமானவர் முதல்வர் ஆகவேண்டும். இல்லையேல் கல்முனை மா நகர் மா நரகமாகும். இது சத்தியம் கடந்த கால முதல்வர்கள் என்ன செய்தனர் என்று நமக்கு தெரியாதா சொல்ல வெட்கமா இரிக்கி. அவக எல்லாம் இப்ப மேடையில தொண்ட கிழிய கத்துறாங்க. மூளைக்கும் முன்னானுக்கும் சம்பந்தம் இல்லாம. அவங்க இப்ப மட்டுமில்ல, எப்பயும் அப்படிதான் என்ன கொடும ஒரு கட்சிக்குல்லையே எத்தன குத்து வெட்டு? இப்படியானவங்கட நிலைமை கடைசியில ?????

    Reply : 0       0

    firas Sunday, 02 October 2011 06:09 PM

    ruzny no comments!!!

    Reply : 0       0

    mca fareed Sunday, 02 October 2011 05:56 PM

    தலைவரின் பேச்சை ஏற்றுக்கொள்ளமுடியாது. நீங்கள் என்னசொன்னாலும் சரி நீங்கள் இந்தப்பக்கம் தலைகாட்டாவிட்டாலும் பரவாயில்லை,காங்கிரஸ் கல்முனையை கைப்பற்றுவது உறுதி. பேசுவதற்கு ஒன்றும் இல்லாமலும், மக்களை ஏமாற்றுவதற்காகவும், நீங்கள் ஒன்றுமே பேசத்தேவையில்லை,

    Reply : 0       0

    mohamed rinose Sunday, 02 October 2011 02:22 PM

    மூத்த போராளியான கௌரவ நிசாம் காரியப்பருக்கு மேயர் சீட் கிடைக்க துஆ செய்கின்றோம்.

    Reply : 0       0

    SIRAJ Sunday, 02 October 2011 05:56 AM

    ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இம்முறை கல்முனை மாநகர சபையில் 12 ஆசனங்களைப் பெறுவது இந்த கூட்டத்தில் புலனானது. பொறுத்திருந்து பார்ப்போம். கொஞ்சப் பேர் இப்பவே உடுப்பைக்கட்டி வைத்துக்கொள்ளுங்கள். ஓடுவதற்கு.

    Reply : 0       0

    சமுதாய ஆர்வலன் Sunday, 02 October 2011 05:49 AM

    சிராஸ் அதிகப்படியான வாக்குகளைப் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதிகப்படியான வாக்குகளைப் பெறாதவருக்கு மேயர் கொடுத்து கட்சியை அழிக்க எத்தனிக்கிறாரோ நம்மட தலைவர்?

    Reply : 0       0

    Nafeel Saturday, 01 October 2011 06:39 PM

    மனதில் என்னவோ எண்ணங்களை வைத்துக்கொண்டு எப்படித்தான் சிரிக்கிறார்களோ?

    Reply : 0       0

    Hari Sunday, 02 October 2011 04:21 AM

    கல்முனை, மக்களின் மரியாதை தலைவர் அஷ்ரப் அமைதத் கட்சி தொடர்ந்தும் தலைவருடைய முயற்சியால் பெற்றெடுத்தத் கல்முனை மாநகரம் ஆளப்பட வேண்டும் . தலைவர் அஷ்ரபின் மாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தான் ஆளவேண்டும் கல்முனை மக்களே, ஜாவத்தை மயானத்திலிருந்து தலைவர் உங்கள் பேச்சுகளை கேட்கிறார். உங்கள் செயல்களை 8ஆம் திகதி பார்க்கயிருக்கிறார். அவர் கண்கலங்க வைத்துவிடாதீர்கள். தலைவரின் இறுதி ஆசை கல்முனை மாநகர சபையாகவே இருந்தது.

    Reply : 0       0

    UMMPA Sunday, 02 October 2011 03:21 AM

    அமைச்சர் ஹக்கீம் என்ன? சொன்னால் நடந்துவிடுமா? நிட்ச்சயமா நிசாம் தான் நிறையவோட்டு எடுத்து வெற்றி நிச்சயம். இது கல்முனை மக்களின் நாடித்துடிப்பு. இது நடக்கும் பொறுத்து இருந்து பார்க்கவும் .

    Reply : 0       0

    faththa Sunday, 02 October 2011 02:39 AM

    தலைவர் நல்ல தகுதியான முதன்மை வோப்பாளர் நிறுத்தி உள்ளார். மக்கள் நன்றாக சிந்தித்து vote போட வேண்டும்.

    Reply : 0       0

    ruzny Sunday, 02 October 2011 01:41 AM

    ஷிராஸ் தான் மேயர் ......

    Reply : 0       0

    kulathooraan Sunday, 02 October 2011 12:48 AM

    முஸ்லிம் காங்கிரசின் கத்தியை கூர்மையாக்கும் இடம் கல்முனை தான். கத்தியை சானை பிடித்தபின் இன்னொரு தேர்தல் வரும் வரை உங்களை காணமுடியாது. இம்முறை அது சவாலாகவே இருக்கும்.

    Reply : 0       0

    meenavan Sunday, 02 October 2011 12:29 AM

    தலைவரே புரிகிறது, கூழ் குடிக்கவேணும் மீசை நனையக்கூடாது. மகிராசாவின் சாமரம் (அமைச்சு பதவி)தேவை, பல்லக்கு (மு.கா.தலைமை) இழக்கவும் கூடாது.

    Reply : 0       0

    Naleem Sunday, 02 October 2011 12:13 AM

    சானாக்கியமுள்ள தலைவரின் பேச்சுக்கள் நீர் மேல் குமிழி போன்றது. நிமிடத்திற்கு நிமிடம் சானாக்கியமாக மாறுபடுவதில் சிறந்தது. இந்தத் தேர்தல் பிரதேசம் இனைந்திருப்பதா அல்லது பிரிபடுவதா என்ற வேள்விக்கான ஒரு தேர்தலாகவே கருதப்படுகிறது. தலைமைகளின் சிறப்பான சானாக்கியமான முடிவில்தான் எதுவுமே தங்கியிருக்கிறது. இவர்தான் முதல்வர் என்று தலைமைகள் தீர்மானிப்பதைவிட இவர்தான் முதல்வருக்கு பொருத்தமானவர் என்பதை அப்பிரதேச வாக்காளர்கள் தீர்மானிக்கட்டும். அதுதான் ஜனநாயக வழி முறையும்கூட. ஜனநாயகம் வாழ வேண்டும்.

    Reply : 0       0

    siraj Saturday, 01 October 2011 11:53 PM

    முஸ்லீம்கள் ஒன்றுபடவேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் இலிருந்து பல பிரிவு ஹக்கீம் ஒரு கட்சி அதாஉல்லாஹ்
    ஒரு கட்சி, பேரியல் அஷ்ரப் ஒரு கட்சி . கடைசியில் யானையையே மக்கள் வெற்றிப்பெற செய்வர். பொறுத்திருந்து பாருங்கள்.

    Reply : 0       0

    ziyath Saturday, 01 October 2011 10:22 PM

    உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று.

    Reply : 0       0

    Doc - KSA Saturday, 01 October 2011 09:46 PM

    Fantastic speech. If eastern muslims consider Hakkiem or Rishath or Athaulla their leader or communalist, then it will be the end of their era. I encourage, all the muslim parents to educate their children in a proper way to avoid the special needs from those politician. We need a intellectual person who can guide our community for bright future not the way what all muslim politicians do as they fill their own desires.

    Reply : 0       0

    Naleem Saturday, 01 October 2011 08:52 PM

    தலைவருடைய உரை பெரிதும் எதிர்பார்க்கையுடன் இருந்தது. இறுதியில் பூச்சியத்தினால் பெருக்கிவிட்டார் மான்புமிகு சானாக்கியமுள்ள தலைவர். தேர்தலில் அதிகப்படியான வாக்குகளைப் பெறுபவர் யாராக இருந்தாலும் அவர்தான் மேயராக வரவேண்டுமே தவிர, பின்வாசலால் வருபவராக இருக்கக்கூடாது. இந்தத் தேர்தல் கட்சியின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்குமிடையிலான ஒரு போர் என்பதை யாரும் மறக்கக்கூடாது. தேர்தலில் கூடுதலான வாக்குகளைப் பெறுபவரே மேயர் என்று சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். தலைவர் அவ்வாறு கூறாததன் மர்மம்தான் என்ன?

    Reply : 0       0

    reeza Saturday, 01 October 2011 07:04 PM

    ஹக்கீமின் செயற்பாடு எப்போதும் தோல்வியில் முடிந்த கதைதான் நிமிர முடியாது. முஸ்லிம் காங்கிரசின் முள்ளி வாய்கால் கல்முனை மாநகர சபை இறுதி தோல்வி அடைய உள்ளார். கட்சி வெற்றி பெற்ற போதும் மக்களுக்கு அது தோல்வியை தழுவியதாக கருதும் அரசின் நடவடிக்கைக்கு ஹக்கீம் கூறும் முடிவு என்ன? ஹரீஸ் அபிவிருத்தி பற்றி பேசுகிறார். இதற்கு ஹக்கீமின் பதில் என்ன? எப்படியோ நிசம் காரியப்பருக்கு முதல்வர் பதவி சொந்தமானால் புது திருப்பம் கல்முனை காணும் என்ற நம்பிக்கை உள்ளது கல்முனை மக்களுக்கு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .