2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கல்முனையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை பிரதேசத்தில் 150 இலட்சம் ரூபாய்  பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  தலைவரும் றிசாட் பதியுதீன் நேற்று சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் கல்முனை மாநகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டங்கள் கல்முனை பிரதேசத்திலுள்ள பல கிராமங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில்  அமைச்சர் றிசாட் பதியுதீன் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கல்முனை மாநகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் றிசாட் பதியுதீன் பள்ளிவாசல்களில் ஏற்பாடு செய்யப்பட்ட தூஆ பிரார்த்தனைகளிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • razeek kalmunai Sunday, 02 October 2011 04:33 PM

    இன்னமும் உரிமை பற்றி கதைத்து கல்முனையின் அபிவிருத்தி இல்லாமல் செய்கிறார். ரிசாத் சார் உங்கள் முயற்சி தொடரட்டும்.

    Reply : 0       0

    sasi Sunday, 02 October 2011 06:20 PM

    கல்முனையின் சிறந்த சேவகன் ரியாஸ் அடுத்த மேயர் நீங்கதான்.

    Reply : 0       0

    iqbal Sunday, 02 October 2011 07:27 PM

    இதுக்கு முதல் எங்கே போனது?

    Reply : 0       0

    kulathooran Sunday, 02 October 2011 08:01 PM

    வெற்றிலை வென்றால் இது நடக்கலாம். வெற்றிலை தோற்றால் அடிக்கல்லுடன் யாவும் நின்றுவிடுமா?

    Reply : 0       0

    Riyal A.M Sunday, 02 October 2011 08:05 PM

    தடி எடுத்தோர் எல்லாம் வேட்டைக்காரனாக முடியாது.

    Reply : 0       0

    Rizard Monday, 03 October 2011 05:16 AM

    தேர்தல் வருவதற்கு முந்தி ஐயாக்களின் காலடித்தடம் கல்முனையில் படவில்லையே! ஏன் இந்த நாடகம்? அடிக்கல் மட்டும் தான் தலை நிமிர்ந்து நிற்கும். கட்டிடம் எழும்பாது. தேர்தலுக்கு முன் அபிவிருத்தியை செய்து விட்டு வாக்கு கேட்டால் மக்கள் கொஞ்சம் யோசித்திருப்பார்கள்.

    Reply : 0       0

    Sanoon Mohideen Monday, 03 October 2011 07:43 PM

    வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் இவ்வளவா?????!!! எங்க இருந்து வந்ததய்யா இவ்வளவு பணம்.....?????

    Reply : 0       0

    kalmunai Monday, 03 October 2011 07:48 PM

    என்ன சசி, கல்முனை நிலவரம் தெரியாமல் சொல்றிங்க!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .