2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற குழுவொன்று செயற்படுகிறது: ஹரீஸ் எம்.பி

Super User   / 2011 ஒக்டோபர் 04 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸிலிருந்து என்னை வெளியேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் தலைமையில் மறைமுக குழுவொன்று செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

இதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் தன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் ஹரீஸ் எம்.பி குறிப்பிட்டார்.

கல்முனையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் மீது முழுமையான உறுதியுடனும் விசுவாசத்துடனும் நான் செயற்பட்டு வருகின்றேன். எதிர்காலத்திலும் அவ்வாறே செயற்படவுள்ளேன்.

அவர் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அவரின் தனிப்பட்டதல்ல. என்;னை கட்சி நடவடிக்கையிலிருந்து வெளியேற்ற  நினைக்கும் அவரின் தலைமையிலான மறைமுக குழுவின் பொய்யான கருத்தே ஆகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் கல்முனை மாநகர சபை தேர்தலில் முரண்பட்டு மூக்கை நுளைத்து கொண்டதனாலேயே இஸ்லாமபாத்  கிராமத்தில் எமது கட்சியினால் பொருத்தமான வேட்பாளரை நிறுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் அக்கிராமத்தின் பிரதிநிதித்துவத்தை இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது

கல்முனை மாநகர சபை தேர்தல் தொடர்பான விடயங்களை தலைமை தாங்கி மேற்கொள்வதற்கு கட்சி தலைமைப்பீடம் என்னை பொறுப்பாக்கியுள்ளது.

இந்த பொறுப்பினை சரியாக நிறைவேற்றி கல்முனை மாநகர சபையில் 12 உறுப்பினர்களை வெற்றி கொள்ளவுள்ளோம். இந்நிலையில் எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிப்பது மன வேதனைக்குரியதாகும். இதனால் கல்முனை மாநகர வாழ் ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்" என்றார்.


You May Also Like

  Comments - 0

  • roy Wednesday, 05 October 2011 09:51 PM

    ரோசன் நீங்கள் இம்முறை ஏலக்ஷன் katkireerkala

    Reply : 0       0

    Ramzan Wednesday, 05 October 2011 06:53 PM

    ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் உங்க காங்கிரஸ் குழப்பத்தை சரி செய்ய முடியல்ல, இதுக்குள்ள இவர்கள் மக்கள சரி செய்யபோறாங்களாம். வடிவேலுட காமடியையும் தான்டிட்டுப்பா.

    Reply : 0       0

    Mohamed Ammaar Wednesday, 05 October 2011 07:12 PM

    பைசால் நல்ல மனிதர், அவரை குறை சொல்லாதீர்கள்.

    Reply : 0       0

    nawshad Wednesday, 05 October 2011 07:54 PM

    இப்படி சண்டை பிடிப்பது அழகில்லை.

    Reply : 0       0

    risa Wednesday, 05 October 2011 08:26 PM

    சும்மா அடுத்தவர பத்தி பேசிகிட்டு இருக்காம முஸ்லிம் சமூகத்துட ஒற்றுமை பற்றி யோசிங்க சஹோதரர்களே!

    Reply : 0       0

    Nafeel YBM Wednesday, 05 October 2011 08:31 PM

    கட்சியை விட்டு வெளியேறியது போதும். வெளியேற்றியதும் போதும். இருப்பவர்களை கொண்டு கட்சியை பாதுகாப்பதற்கு முயலுங்கள். .......

    Reply : 0       0

    rozan Wednesday, 05 October 2011 08:32 PM

    Riyal ...நீங்க சொல்றது முற்றிலும் சரி....Uooran, ... கல்முனை கடை வளவுக்கு சண்டைபோட்டு கொலைக்கு கொடுத்தவரின் பக்கமாக நின்று யோசித்தால் உண்மை கசக்கும்......

    Reply : 0       0

    fathima nusrath Wednesday, 05 October 2011 08:40 PM

    கட்சியில் இருந்து என்னத்த சாதித்தார்? ஊருக்கும் மக்களுக்கும் என்ன செய்தார்? நாங்கள் அபிவிருத்தியுடன் கூடிய கல்முனை மாநகரம் மாக அமையவும் விரும்புகிறோம்.

    Reply : 0       0

    aakib Wednesday, 05 October 2011 09:30 PM

    தம்பி ரோசன் சொன்னமாதிரி அல்லா சதிகரருக்கெல்லாம் சதிகாரன். நம்ம எம்பி களமுனைக்கு செய்யிற சதிக்கும், துரோகத்துக்கும் விரைவில் காட்டுவான்.

    Reply : 0       0

    Moha Wednesday, 05 October 2011 06:37 PM

    மக்களே! இதில் சிந்திப்பதுக்கு ஒன்றும் இல்லை. மிக விரைவில் நிந்தவவூருக்கு ஆளும்கட்சியிலிருந்து ஒரு அமைச்சர் வருவார். அபிவிருதியெல்லாம் நடக்கும். Don’t Worry.

    Reply : 0       0

    samsudeen Wednesday, 05 October 2011 10:09 PM

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

    Reply : 0       0

    jaks Wednesday, 05 October 2011 11:14 PM

    தாமதியாமல் உடன் செய்யவும்

    Reply : 0       0

    jaks Wednesday, 05 October 2011 11:21 PM

    ஐயோ ரோசனின் நிலை? பரிதாபம்

    Reply : 0       0

    m.khan Thursday, 06 October 2011 12:00 AM

    ஒற்றுமைய கடைப்பிடீங்கப்பா. பட்டது pothatha?

    Reply : 0       0

    ruzny Thursday, 06 October 2011 01:00 AM

    எமது மேயர் ஷிராஸ்

    Reply : 0       0

    Hameed faleel Thursday, 06 October 2011 01:37 AM

    கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. கல்முனை பஸ் நிலையத்தில் உள்ள 17 கடைகளையும் பூட்டி யாருக்கும் பலன் கிடையாது.

    Reply : 0       0

    riyas Thursday, 06 October 2011 02:35 AM

    எல்லாம் நல்லதுகப்பா.... சண்டை வேண்டாம்...

    Reply : 0       0

    kulathooran Wednesday, 05 October 2011 02:50 PM

    பொருத்தமான வேட்பாளர் என கூறுவது அவரது சகோதரரா?

    Reply : 0       0

    oor kuruvi Wednesday, 05 October 2011 05:49 AM

    இவரை வெளியேற்று முன் இவராக வெளிய வந்தா அவருக்கு மட்டுமல்ல கல்முனை மாநகருக்கும் சுபீட்சம் நிறைந்ததாக அமையும். கல்முனை மாநகரும் சிறப்பான எழுச்சி பெறும். இறைவா இது நடக்க துணை புரிவாயாக. எமது எதிர்கால சந்ததியாவது சிறப்பாக அபிவிருத்தி யுடன் கூடிய கல்முனை மாநகரத்தில் சிறந்த பிரஜையாக வாழட்டும்.

    Reply : 0       0

    Akkaraipattu Wednesday, 05 October 2011 06:40 AM

    ஏன் சார் செத்த பாம்புக்கு அடிக்கயல்.....பாவம் இந்த மாமா .......

    Reply : 0       0

    rozan Wednesday, 05 October 2011 09:02 AM

    கல்முனையில் ஒரு மக்கள் ஆதரவு கொண்ட இவரை ஓரம்கட்டுவதற்கு .....எடுக்கும் முயற்சிக்குஇ தேர்தலின் மூலம் மக்கள் தீர்ப்பளித்து இவருக்கான ஆதரவினை வெளிக்காட்ட வேண்டும்........

    Reply : 0       0

    rozan Wednesday, 05 October 2011 09:39 AM

    இது தலைவரின் காழ்புணர்வு. தம்பி....உங்களின் மக்கள் செல்வாக்கு கண்டு.............9 ம் திகதியண்டு..... எல்லாம் இவங்களுக்கு விளங்கும் தம்பி............

    Reply : 0       0

    rosan Wednesday, 05 October 2011 11:51 AM

    கவலை பட வேண்டாம், அல்லாஹு சதி காரர்களுக்கு எல்லாம் சதி காரன், நீங்க சொல்லுவது உண்மை அவரின் தலைமைல் ஜமீல், ஜாவத் , நிசம் காரியப்பர் போன்றே கூட்டம் அலைந்து திரிகிறது. அவசர படாம நிதானமாக கையாளவும் , தலைவர் விரும்ப மாட்டார் இன்னொரு பிரிவை என்று நம்ம்புறம் .....

    Reply : 0       0

    uooran Wednesday, 05 October 2011 02:16 PM

    முஸ்லீங்களின் தலைநகரான கல்முனை மாநகர சபைக்கான இறுதி நேர கூட்டங்களை ஒழுங்கு செய்ய முடியாத வங்குரோத்து அரசியல் செய்யாமல் ஒதுங்டுங்க. அப்போதுதான் கல்முனை பிரதேச வாதமற்ற நகரமாக உருப்படும்.

    Reply : 0       0

    bis Wednesday, 05 October 2011 02:29 PM

    தயவு செய்து வெளியேறி விடுங்கப்பா!

    Reply : 0       0

    meenavan Wednesday, 05 October 2011 02:32 PM

    வீதியையும் செப்பனிட முடியவில்லை, கல்முனை பஸ் நிலைய 17 கடைகளையும் பல வருடங்களாகியும் மக்களிடம் கையளிக்க முடியவில்லை. இந்நிலையில் ஒழுக்காற்றில் ஒதுக்குவதை விட நீங்களாகவே ஒதுங்கிக்கொள்ளுங்கள். மாநகருக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது.

    Reply : 0       0

    jaleel Wednesday, 05 October 2011 04:50 AM

    கட்சியில் இருந்து என்ன சாதிச்சார்?

    Reply : 0       0

    deen Wednesday, 05 October 2011 04:21 PM

    இப்ப 12 உறுப்பினர்களை பெறவேண்டும் என்று கூறுகின்றார். அன்மையில் அவர் அமைத்துக் கொண்ட தனி மேடைப்பேச்சின் போது என்னோடு வேலைசெய்வதற்கு 8அல்லது 9 உறுப்பினர்களை பெற்றால் போதும் என்று கூறினார். இவரது கருத்து முன்னுக்கு பின் முரனானது.........?

    Reply : 0       0

    roy Wednesday, 05 October 2011 05:46 PM

    கல்முனை இவர் இருந்து கண்ட அபிவிருத்தி ஒன்றுமில்லை, புதியவர்களுக்கு இடம் கொடுங்கள்

    Reply : 0       0

    roy Wednesday, 05 October 2011 05:47 PM

    றோசான் உங்கள் அரசியல் வங்குரோத்து இங்கும் காட்ட வேண்டுமா?

    Reply : 0       0

    roy Wednesday, 05 October 2011 05:49 PM

    நீங்கதான் ஆத்திரம் அடைந்து உள்ளீர்கள் .. மக்கள் அல்ல.

    Reply : 0       0

    Maruthoor A.R.M Wednesday, 05 October 2011 05:52 PM

    நீங்க ஏன் நிசாம் காரியப்பருக்கு சப்போர்ட் பண்ணாம சிராசுக்கு சப்போர்ட் பண்ணுரிங்க ? ? நிசாம் மேயரானால் உங்களுக்கு கல்முனையில் மதிப்பில்லாமல் போய் விடும் என்ற பயமா ??

    Reply : 0       0

    Riyal Wednesday, 05 October 2011 06:06 PM

    நிசாம்ட வீட்ட சட்ட ஆலோசனைக்கு போனவங்களுக்குத் தெரியும் அவருடைய காழ்ப்புணர்ச்சி. இவரெல்லாம் மேயரா வந்து கிழப்பாங்க.

    Reply : 0       0

    uooran Wednesday, 05 October 2011 06:37 PM

    ரியால், நிசாமுகிட்ட பிழையான சட்ட ஆலோசனை கேட்கப்போய் அடி வங்கி உள்ளார்போல........
    இப்ப எங்களுக்கு தேவை கல்முனைக்கு சரியான தலைமைத்துவம். அது நிசாம் கரியப்பரால் முடியும் என கணிசமான மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .