2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'பாமாலை பாடி, பூமாலை சூடும் முப்பெரும் விழா'

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

'பாமாலை பாடி, பூமாலை சூடும் முப்பெரும் விழா' எனும் தலைப்பிலான வைபவமொன்று அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

புலமைப்பரிசில் பரீட்சை 2011இல் தேறிய மாணவர்கள், தேற்றிய ஆசிரியர் ஏ.எல்.றஸீன் ஆகியோரைப் பாராட்டுதல், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எல்.எம்.காசிமிற்கான வரவேற்பு மற்றும் அறபா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.அப்துல் சலாமிற்கான பிரியாவிடை ஆகிய நிகழ்வுகளை உள்ளடக்கி – மேற்படி முப்பெரும் விழா நடைபெற்றது.

அறபா வித்தியாலய பிரதியதிபர் எஸ்.ஏ.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாகவும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் கௌரவ அதிதியாகவும் அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் மற்றும் அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அதிகாரி என்.கே.எம்.இப்றாகிம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாவும் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர், பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
   
இதேவேளை, மாகாண அமைச்சர் உதுமாலெப்பையும் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களின் பெயரில்; சிறுவர் சேமிப்புக் கணக்குகளைத் திறந்து அதற்கான புத்தகங்களை மாணவர்களிடம் வழங்கினார்.

மேற்படி விழாவில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு ஆசுகவி கலாபூசண் அன்புடீன் வாழ்த்துப்பா வழங்கி வைத்தார்.

இறக்காமம் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் எம்.எம். காலித்தீன், பிரதித் திட்டமிடல் அதிகாரி ஐ.எல். தௌபீக், அட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினர்கள் ஐ.எல்.மனாப், எஸ்.எல்.முனாஸ்,  பாடசாலை அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • nasirahamed_lecturer_ninthavur Friday, 07 October 2011 08:40 PM

    அறிவு ஆட்டல் .............. ஹ ஹ ஹ

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X