2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆரவாரங்களுடன் அடிக்கல் நாட்டப்பட்ட வீதி நிர்மாணங்கள் இதுவரை பூர்த்தியாகவில்லை

Kogilavani   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)
'அக்கரைப்பற்று மாநகரசபையின் முதல்வர் - 'பேண்ட்' வாத்தியங்கள் முழங்க, பட்டாசுச் சத்தங்களின் ஆரவாரங்களுக்கிடையில் வந்து, அடிக்கல் நட்டு பெயர்த்தகடு அமைத்துவிட்டுச் சென்ற வீதி நிர்மாணப் பணிகள் இதுவரை இடம்பெறாமை குறித்து மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அக்கரைப்பற்றிலுள்ள பல உள்வீதிகள் மாட்டு வண்டிகள் பயணிக்க முடியாத நிலையில் கணப்படுகின்றன' என அக்கரைப்பற்று மாகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும், மார்க்க அறிஞருமான அஷ்ஷேய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று மாநகரசபைக் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் ஹனீபா மதனி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்:

'வடிச்சலுடன் கூடிய வீதி அமைப்புகள் இல்லாமையானது அக்கரைப்பற்று மாநகரின் நீண்டகாலக் குறைபாடாகும். காலாகாலமாக அக்கரைப்பற்று மக்கள் இவ்விடயத்தில் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

அக்கரைப்பற்று 5 ஆம் குறிச்சியில் எனது வீட்டுக்கு அருகாமையில் - வடிகால் அமைப்புடன் கூடிய வீதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா எனக் கூறப்பட்டு நிகழ்வொன்று இடம்பெற்றது. மேலும், அந்த இடத்தில் கல் நாட்டி, பெயர் தகட்டினையும் இட்டனர். இந்த நிகழ்வுக்கு அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வர் 'பேண்ட்' வாத்தியங்களுடன், பட்டாசு வெடிச் சத்தங்களுக்கிடையில் ஆரவாரமாக அழைத்துவரப்பட்டிருந்தார். ஆனால், இன்னும் வடிகால் அமைப்புடன் கூடிய அந்த வீதி நிர்மாண வேலை ஆரம்பிக்கப்டவேயில்லை.

அமைக்கப்படாத அந்த வீதி நிர்மாண வேலைக்கென நடப்பட்ட பெயர்த் தகட்டினையும் இரவோடிரவாக அகற்றி விட்டார்கள். இப்போது பருவகால மழை தொடங்கியிருக்கின்றது. நீண்டகாலமாக வடிகான் இல்லாத குறைபாட்டினால் அல்லல்பட்டுக் கொண்டு, வடிகான் வசதிகளை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே எஞ்சியுள்ளது.

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் சீரான வடிகான் வசதிகள் இல்லாமையால் மழை காலங்களில் நீரில் மூழ்கும் வீடுகளில் அநேகமானவை வெள்ளப் பிரச்சினை காரணமாக உடைக்கப்பட்டு பெருமளவான பணச் செலவுகளுக்கு மத்தியில் மீளமைக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் மாரிகாலத்துக்கு முன்பு, அவசரமாக வடிகான் அமைப்பு வேலைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். இல்லா விட்டால், வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்படும் மக்கள் நம்மைத் திட்டித் தீர்த்து விடுவார்கள்.

அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் சனத்தொகைப் பெருக்கம் காரணமாக குடியிருப்புக்கான நிலப் பரப்பின் அளவில் போதாமை ஏற்பட்டு வருகின்றது. இது ஒரு புதுப் பிரச்சினையாகும். இதனால் குளிக்கும் போது ஏற்படும் கழிவுநீரினை தமது வளவு எல்லைக்குள் மக்களால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. இதன்போது, இவ்வாறான கழிவு நீர் வடிகான்களுக்குள் செலுத்தப்படுகின்றன. இது தொடர்பிலும் மாநகரசபை கவனம் செலுத்த வேண்டும்.

வெள்ள நீர் வடிந்தோட வடிகான்கள் எவ்வளவு முக்கியமோ, அதுபோல கழிவு நீரைக் கடத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதும் இன்றியமையாததாகும்  என்றார்.


You May Also Like

  Comments - 0

  • faizmohamed Tuesday, 11 October 2011 10:38 PM

    தேர்தல் வரட்டும் பார்ப்போம்.

    Reply : 0       0

    kamsab Wednesday, 12 October 2011 12:41 AM

    அடுத்த தேர்தலுக்கு துரும்பு சீட்டு வேண்டுமே எமது அமைச்சருக்கு. ஆகவே காத்திருங்கள், அடுத்த தேர்தல் வரும் முன்னர் எப்படியாவது அரையும் குறையுமாய் வேலை ஆரம்பிக்கும்.

    Reply : 0       0

    samsudeen Wednesday, 12 October 2011 12:47 AM

    தின்னவும் மாட்டீர்கள், தின்ன விடவும் மாட்டீர்கள்.

    Reply : 0       0

    arasi Wednesday, 12 October 2011 02:41 AM

    ஹனீபா மதனி அவர்களே இதற்கு முதல் உங்கள் வீட்டை வீட்டாரை, மகனை சரி செய்யவும். பிறகு வீதிக்கு வாருங்கள்.

    Reply : 0       0

    aliyar mohamed uwais Wednesday, 12 October 2011 07:49 PM

    நல்ல விடயங்களை யார் கதைத்தால் என்ன அரசி?

    Reply : 0       0

    ibnu aboo Sunday, 16 October 2011 01:34 AM

    அக்கரைபற்றுக்கும் இந்த வடிகான் வேளைக்கும் ஏழாம் பொருத்தம். அக்கறைப்பற்று என்றொரு ஊர் தோன்றியதில் இருந்து வெள்ளம் வடிந்தோட வழியில்லாமல் இன்றுவரை திட்டங்கள் தான் போடுகிறார்கள். விஞ்ஞானம் தொழில்நுட்பம் அதற்குரிய தகுதியுள்ளவர்கள், அரசியல் அதிகாரம், நிதிவசதி எல்லாமிருந்தும் வடிகான் அமைக்க மட்டும் முடியாது?

    Reply : 0       0

    hamad Monday, 06 February 2012 07:15 PM

    எந்த வேலையில் வசூல் அதிகமாக கிடைக்குமோ அந்த வேலை நடக்குமுங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .