2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வதந்தியினால் சாய்ந்தமருதில் பதற்றம்

Super User   / 2011 ஒக்டோபர் 11 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

கல்முனை மேயராக சட்டத்தரணி நிசாம் காரியப்பரை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர் பீடம் தீர்மானித்ததாக சாய்ந்தமருதில் வதந்தி பரவியதையடுத்து, அப்பகுதி மக்கள் சிலர் வீதிகளில் டயர்களை எரித்து க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது தனியார் பஸ் ஒன்றின் மீது கல்வீச்சும் மேற்கொள்ளப்பட்டது. பஸ் ஒன்றும் தாக்கப்பட்டது. பதற்றம் நிலவியது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீலின் கணினிப் பயிற்சி நிலையமும் தாக்கப்பட்டதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மீரா சாஹிர் சிராஸ்இ சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகிய இருவரையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைமை நாளை புதன்கிழமை அழைத்து கலந்துரையாடியதன் பின்னரே  இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றநிலை தனக்கும் கட்சித் தலைமைக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சிலரால் ஏற்படுத்தப்பட்டது எனவும் தனக்கும் இந்நடவடிக்கைளுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை எனவும் மீரா சாஹிர் சிராஸ் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.

"மேயர் பதவி தொடர்பாக கட்சியின் அதி உயர் பீடம் நாளை தீர்மானிக்கவுள்ளது. அதுவரை அமைதியாக இருக்குமாறு மக்களை கோரியுள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.

சாய்ந்த மருதில் தற்போது பதற்ற நிலை தணிந்துள்ளதுடன் அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.  (படப்பிடிப்பு: அப்துல் அஸீஸ்)

 

 



 


You May Also Like

  Comments - 0

  • Whistle Blower Wednesday, 12 October 2011 10:15 PM

    ஒரு கள்ளம் இல்லாதவர் வருவதுக்கு இடம் கொடுங்கோ , களவு இல்லாத, கள்ள படிப்பு சான்று இதழ் இல்லாதவர் நிசாம் , நிசாம் உண்மையாக படித்து வந்தவர். வெளிநாடு அனுப்பி ஆட்களை ஏமாற்றாதவர். நிசாம் வரட்டும், விடுங்கோ.

    Reply : 0       0

    maazeen Wednesday, 12 October 2011 03:12 PM

    இதில் இருந்து ஒன்று புரிகிறது மக்கள் தனி மனிதனுக்கு தான் வாக்கு அளித்திருகிறார்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக அல்ல.
    அவ்வாறு அளித்திருந்தால் ஏன் பிளவு வர வேண்டும்? ???

    Reply : 0       0

    iqbal Wednesday, 12 October 2011 03:25 PM

    சிராஸ் பொறுத்து இருங்கள் இதை விட எம்பி/ முதலமைச்சர் பதவியை கட்சி உங்களுக்கு வழங்கிடலாம். கட்சிக்கு கட்டுபடுங்கள்
    உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

    Reply : 0       0

    iqbal Wednesday, 12 October 2011 03:33 PM

    சம்மாந்துறைக்கு எம் பி இல்லாத போது சாய்ந்தமருதுக்கு வழங்கியது ஹக்கீம் தானே? அப்போது நல்லம் இப்போது koodathaa?

    Reply : 0       0

    mohammd Wednesday, 12 October 2011 04:38 PM

    இரண்டும் ஊரும் முஸ்லிம் வாழும்...

    Reply : 0       0

    Abu Mohd. Riyal Wednesday, 12 October 2011 04:52 PM

    நிசாம் காரியப்பர் மேயர் பதவிக்கு பொருத்தமானவராக இருக்கலாம். ஆனால் மக்கள் அவரை தெரிவு செய்யவில்லையே .. . ! ! ! ! மு.காங்கிரஸ் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் என நாம் எதிர் பார்க்கிறோம் ....!! !! !!

    Reply : 0       0

    rojaa Wednesday, 12 October 2011 05:55 PM

    சிராஸ்தான் மேயர்

    Reply : 0       0

    pioneertransport@gmail.com Wednesday, 12 October 2011 07:09 PM

    நிசாம். அவர் சரியாக செயட்பட்டிருந்தால் இன்று முஸ்லிம் காங்கிரசின் தலைவராக இருக்க வேண்டியவர். எவர் மேயர் ஆனாலும் பெரிதாக ஒன்றும் பண்ணிட முடியாது. காரணம் நீங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவு மட்டும் தான். ஆளும் கட்சியல்ல.

    Reply : 0       0

    sai marathan Wednesday, 12 October 2011 09:00 PM

    நிசாம் அல்லது பசீர் மேயரகனும்.

    Reply : 0       0

    aTHAM Wednesday, 12 October 2011 09:14 PM

    இப்படி ஒரு பிரச்சினை வரும் அன்று தெரிந்துதான் நான் ஒருவருக்கும் 'வோட் போடல.

    Reply : 0       0

    ummpa Wednesday, 12 October 2011 02:59 PM

    யார் இவர்கள் ! எல்லாவற்றுக்கும் அளவு இருக்கிறது ! சாய்ந்தமருதுக்கு தனி வரலாறு இருக்கிறது அதில் இருந்து நாம் சற்றும் குழம்பிவிடக்கூடாது . உலமாக்களிடம் ஆலோசனை நாடவும் அவர்கள் தீர்மானம் எடுக்கட்டும் . குழப்பம் பண்ணவென்று பக்கத்தில் இருப்பவர்கள் உங்களை குழப்புவார்கள் இதக்குதான் நாம் சற்று சிந்தித்து நடக்கவேண்டும் .

    Reply : 0       0

    pasha Wednesday, 12 October 2011 10:27 PM

    இரண்டு ஊர் பெரியார்களும் கூடி ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும். இரண்டு ஊர்களும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை அரசியலாளரின் பின்னால் சென்று உங்கள் ஒற்றுமையை விட்டு விடவேண்டாம். இரண்டு ஊர்களையும் மோத விட்டு அதில் லாபம் பெற்று ஜனாதிபதியிடம் கல்முனை தன் கையில் என வீராப்பு பேச நினைக்கும் முதலாளி அரசியலுக்கு பின்னால் சென்று உங்களை நீங்களே பலிக்கடாவாக்க வேண்டாம்.

    Reply : 0       0

    ruzny Thursday, 13 October 2011 12:42 AM

    பணம் பத்தும் செய்யும் என்றால் ஏன் மக்கள் மயோன் அவர்களை ஆதரிக்கவில்லை .. அனுபவம் உள்ளவர் அரசியலுக்கு வரணும் என்றால் தலைவர். மன்சூர் அகமத் மஜீத் என்பவர்களை வேட்பாளராகக போட்டிருக்கலாமே ...

    Reply : 0       0

    ruhaim Thursday, 13 October 2011 02:28 AM

    இது என்னப்பா? பதவி மோகமா? / மத்தவரின் பதவியை தட்டிப் பறிக்கும் புத்தியா?

    Reply : 0       0

    jafir Thursday, 13 October 2011 03:38 AM

    ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் இதுதான் இப்போ நடக்கிறது......

    Reply : 0       0

    mmm.mufaris Thursday, 13 October 2011 05:20 AM

    தேவையற்ற பிரச்சனை............ கட்சி மக்களின் தீர்மானத்துக்கு எதிராய் முடிவு எடுக்கலாமா?

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 13 October 2011 05:38 PM

    இன்னும் பொறுமையுடன் இருக்க முடியாது. சாய்ந்தமருது மக்களின் எண்ணத்தை மதிக்க வேண்டும். உடனே வெற்றி பெற்ற சிராசுக்கு மேயர் பதவி கொடுக்கப்பட வேண்டும். ஏன் என்றால் தேர்தலுக்கு முதல் எதுவும் சொல்லப்படவில்லை மேயர் கட்சி தீர்மானிக்கும் என்றிருந்தால் பரவாய் இல்லை.

    Reply : 0       0

    hafiz Thursday, 13 October 2011 08:06 PM

    தேர்தலுக்கு முதலிலேயே இது சம்பந்தமான முடிவு எட்டப்பட்டிருக்க வேண்டும் (வியூகம் வகுத்து செயல் படுபவர்கள் ?????)
    ஆனால் நடந்தது என்ன ? இஸ்லாம் எதனை கடுமையாக ஜாஹிலியத் என்று எச்சர்க்கின்றதோ (பிரதேச வாதம் )அதனையே அதனையே இஸ்லாத்தின் பெயராலும் முஸ்லிம்களின் பெயராலும் கட்சி வளர்க்கும் வயிறு வளர்க்கும் கும்பல் செய்து வருகின்றது .

    Reply : 0       0

    amr Thursday, 13 October 2011 09:49 PM

    exam la pass panniya waruku 2 year koduthathu anithy
    fulla koduka wendum.

    Reply : 0       0

    mohamed Saturday, 15 October 2011 07:06 PM

    கல்முனை முஸ்லிம்களுக்குள் ayn இவ்வளவு பிரிவு ? இறைவனிடம் pirarthanai செயுங்கள்.

    Reply : 0       0

    uurawan Wednesday, 12 October 2011 05:18 AM

    சரியாக சொன்னிர்கள் jes.

    Reply : 0       0

    ruzny Wednesday, 12 October 2011 03:47 AM

    ஊரை காட்டிகொடுத்ததுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் ....

    Reply : 0       0

    jes Wednesday, 12 October 2011 03:47 AM

    அராஜகம் ஆரம்பித்து விட்டது. சிராசை வைத்து பின்னப்பட்ட சதிவலை இது. சாய்ந்தமருது மக்கள் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

    Reply : 0       0

    pancooth Wednesday, 12 October 2011 03:48 AM

    ரவுப் ஹக்கீம் எப்படி பட்டவர் என்பதை அதாவுல்லாஹ்விடம் கேட்டு படிங்கள்.

    Reply : 0       0

    sasi Wednesday, 12 October 2011 03:49 AM

    பிரதேசவாதம் கொண்டவர்களை அடக்கும் காலம் வந்து விட்டது.

    Reply : 0       0

    சிறாஜ் Wednesday, 12 October 2011 03:51 AM

    குனால் நீர் சரியாக படித்து கூறியிருந்தால் கேட்டிருப்பினம். நீர் ஏன் படித்து படித்து கூறினீர். அது தப்புத்தானே?
    இனிமேல் சரியா படித்திட்டு மக்களுக்கு சொல்லனும். ஓகே?

    Reply : 0       0

    rija Wednesday, 12 October 2011 03:56 AM

    இனிமேலாவது கல்முனையர்கள் புரிந்து கொண்டால் சரி.

    Reply : 0       0

    jhony Wednesday, 12 October 2011 04:14 AM

    நிசாம் காரியப்பருக்கு வழங்கப்பட்டால் அது அநீதி..

    Reply : 0       0

    jes Wednesday, 12 October 2011 04:46 AM

    நீங்க செய்த சேவைகளின் மொத்த தொகை இன்றைய சேதேங்களுக்கு ஈடாகுமா? ruzny உங்களைப்போன்றே சிலர்தான் ஊரை காட்டிகொடுகிரீர்கள்- நாகரிகமற்றவர்கள் என்று. மற்றபடி சாய்ந்தமருது சிரசுக்கு வாக்கு போட்டது உண்மைதான். ஆனால் சாய்ந்தமருது மக்கள் எப்போதும் மற்றவர்களை மதிப்பவர்கள், நாகரிகமானவர்கள். பிரதேச வெறி பிடித்தவர்களல்ல. உங்களைப்போன்றே கிணற்று தவளைகளால்தான் எல்லோருக்கும் அவமானம்.

    Reply : 0       0

    usam Wednesday, 12 October 2011 05:11 AM

    sirje kuthan mayer kodu padal vandum.

    Reply : 0       0

    kunaal Wednesday, 12 October 2011 03:40 AM

    இதை தான் படித்து படித்து கூறினோம். உங்கள் தலைவரின் புத்தி எப்படி ?

    Reply : 0       0

    Sanoon Mohideen Wednesday, 12 October 2011 05:47 AM

    சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்கள் அனைவராலும் மதிக்கப்படுபவர் என்பதில் வேற்று கருத்து கிடையாது. எனினும் முடிவுகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு அமையவே எடுக்கப்பட வேண்டியிருக்கிறது.
    மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கபட வேண்டியதும் அவசியமானது என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.
    நிஸாம் காரியப்பர் அவர்கள் இப்பதவியை ஏற்றுக்கொள்வதனூடாக சமூகப் பிளவுகள் ஏற்படுவதற்கு துணை போய்விடக்கூடாது.

    Reply : 0       0

    makan Wednesday, 12 October 2011 05:53 AM

    பணம் பத்தும் செய்யும் ....

    Reply : 0       0

    nibrasam Wednesday, 12 October 2011 06:09 AM

    டயர் எரிக்கும் தம்பியுடன் சேர்ந்து புதுத் தம்பியும் டயர் எரிக்கிறாரு? பணம் பாதாளம் வரை பாயுமாம். கல்முனையின் தேர்தல் முடிவும் அதுதான். இப்போ படிப்பு,அறிவு,ஆற்றல்,அனுபவம் என்பவற்றிட்கு ஏது மதிப்பு? நமது தலைமைத்துவம் பணத்தின் பக்கமா அல்லது படிப்பின் பக்கமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போமே!

    Reply : 0       0

    kulathooran Wednesday, 12 October 2011 06:33 AM

    மு.கா. வை முதலாளி காங்கிரஸ் என்று சொல்லுவோமா? முதலுக்கு இழப்பு ஏற்பட்டால் எதையும் செய்வான், அதுதான் மருதூரில் நடந்துள்ளது.jes குறிப்பிட்டது போல் சேதங்களை எவ்வாறு ஈடு செய்வது?

    Reply : 0       0

    Akkaraipattu Wednesday, 12 October 2011 07:54 AM

    மக்கள் மனதில் மந்திரியான சிராஷுக்குதான் வழங்கப்பட வேண்டும் ......
    சிராஸ் பொருத்தமானவர் ..... இளைய சிந்தனை அபிவிருத்திக்கு வழிவகுக்கும் .........

    Reply : 0       0

    hameed Wednesday, 12 October 2011 01:15 PM

    தகுதி, அறிவு, புத்திகூர்மை, அனுபவம் , ஆளுமை நிசாம் காரியப்பரிடம் உண்டு. பண பலத்தால் வாக்கு வாங்க முடியும், ஆனால் நிருவாகம், மக்களுடன் பழகுதல், சேவை மனப்பான்மை? எனவே நிசாம் மேயர் ஆக நியமிக்க பட வேண்டும். இதுவே சரியான தீர்மானம் ஆகும்.

    Reply : 0       0

    செம்பகம் Wednesday, 12 October 2011 02:25 PM

    இவைகளுக்கெல்லாம் காரணம் தலைவரும் தவிசாளரும் தான் பெறுப்பேற்க வேண்டும்.

    Reply : 0       0

    riyas Wednesday, 12 October 2011 02:32 PM

    பணம் பாதாளம் மட்டும் பாயும், அறிவு ஜெயிக்குமா? பணம் ஜெயிக்குமா?....பார்க்கலாம் ........!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X