2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கல்முனை மாநகர மேயராக சிராஸ் மீராசாஹிப் நியமனம்

Super User   / 2011 ஒக்டோபர் 13 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி,எம்.சுக்ரி)

கல்முனை மாநகர மேயராக சிராஸ் மீராசாஹிப் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் 16,457 அதிகூடிய வாக்குகளை பெற்ற சிராஸ் மீராசாஹிப் முதல் இரண்டு வருடங்களுக்கு கல்முனை மேயராக செயற்படுவார் எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பின்னர் உள்ள இரண்டு ஆண்டுகளுக்கு கல்முனை மாநகர சபை தேர்தலில் 13,948 இரண்டாவது அதிகூடிய வாக்குகளை பெற்ற சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மேயராக செயற்படுவார் என  அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை தேர்தலில் அதிகூடிய வாக்குகளை பெற்ற சிராஸ் மீராசாஹிபை மாநரக மேயராக நியமிக்குமாறு சாய்ந்தமருது பிரதேச மக்கள் கடையடைப்பு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்க்து.


You May Also Like

  Comments - 0

  • Maruthuran Friday, 14 October 2011 05:55 AM

    வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    hamza Thursday, 13 October 2011 09:55 PM

    அஸ்ஸலாமு அழைக்கும்.
    எங்கள் சாய்ந்தமருது ஊருக்கு முதன் முதலில் மேயர் கிடைத்தமைக்கு இரு கரம் ஏந்தி மிகவும் சந்தோசம் அடைகின்றேன்.
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
    தலைவர் .... நீதி அமைச்சர் ரவூப் ஹகீம் சேர் அவர்களுக்கும் நன்றி கூறி, சாய்ந்தமருது ஊர் சார்பில் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன். நன்றி. (எ.ஹம்சா)

    Reply : 0       0

    இயல்பாய் இரு Thursday, 13 October 2011 10:01 PM

    அல்ஹம்துலில்லாஹ். இரு சாராரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுபோல் தோன்றுகிறது. கீரைக்கடைக்கும் எதிர் கடை வேண்டும் என்று சொல்வார்கள், போட்டி இருந்தால்தான் சேவை செய்வார்கள். எப்படியோ, சகோதரர்கள் போன்று வாழ்ந்துவருகின்ற எமது சாய்ந்தமருது, கல்முனை மக்கள் ஒன்றுபட்டு இருந்தாலே வெற்றிதான்.
    இறைவன் இவர்களுக்கு நல்ல சேவை செய்கின்ற மனப்பான்மையையும், பிரதேசவாதம், இனரீதியான பாகுபாடுகளுக்கு அப்பால், எல்லோரையும் சமமாக மதித்து சேவையாற்றக்கூடிய மனநிலையையும் நல்குவானாக.

    Reply : 0       0

    umppa Thursday, 13 October 2011 10:04 PM

    I don't thing any special in this drama. but Kalmunai is always behind SLMC. some of the Intruders done unacceptable kiosk yesterday. Mr. Nizam never going to take over Mayor roll without getting more preferential which he has said one of the meeting. Just type kariapper in google and let you know the Past story about Kariapper family who most respected.
    Mr.Siraz is innocent person in this senario. Don't worry Kariapper will do whatever needed for Kalmunai Municipal Council. Better don't go behind intruders who want to make separation between Maruthu and kalmunaikudy.
    Insha Allah, everything going to be win.

    Reply : 0       0

    uooran Thursday, 13 October 2011 10:12 PM

    பொறுப்பு வாய்ந்த கட்சி என்ற அடிப்படையில் தீர்மானங்களை பலருடனும் ஆலோசித்து தீர்வு ஒன்றுக்கு வருவதற்கு இடையில், சிலரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது நாகரிகமானதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த வழிகாட்டுதலை மற்ற ஊர்களும் பின்பற்றாமல் இருப்பதே சிறந்தது. இப்படியான நடவடிக்கைகளுக்கு உயர் நிர்வாகங்களும் ஊரின் படித்தவர்களும் துணை போனது வருத்தத்துக்கு உரியது. சிராஸ், உங்களுக்கு இந்த பதவியை பெற்றுத்தர மக்கள் கடையடைப்புகள் மேற்கொண்டது போன்று இந்த மக்களால் உங்களுக்கு எதிராக வராமல் பார்க்கவும்.

    Reply : 0       0

    Mohamed Aaeis Thursday, 13 October 2011 10:29 PM

    பல போராட்டங்களுக்கு மத்தியில் கல்முனை மாநகரின் முதல்வராக முடிசூடிய சாய்ந்தமருதின் எதிகால அரசியல் தலைவருக்கு எனது உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்..முஹம்மது ஆயீஸ்.. சாய்ந்தமருது.

    Reply : 0       0

    yaseen Thursday, 13 October 2011 10:39 PM

    நல்ல முடிவு. ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதல். மு கா விற்கு வித்திட்ட கிராமங்களில் சாய்ந்தமருதும் ஒன்று. ஆனால் கனி வந்தபோது பின்தள்ளப்பட்டது. இனியாவது சம உரிமை பெறட்டும்.

    Reply : 0       0

    ruzny Friday, 14 October 2011 12:00 AM

    இதைத்தனே நங்கள் சொன்னோம் .. மக்கள் ஒற்றுமைக்கு இது ஒரு உதாரணம் ...இப்படி ஒற்றுமையாக நாம் செயல்பட்டால் இன்னும் பல விடயங்களை வென்றெடுக்கலாம்

    Reply : 0       0

    whistle blower Friday, 14 October 2011 12:06 AM

    கட்சியின் அழிவு ஆரம்பமாகி விட்டது. இரத்தம் சிந்தி வளர்த்து பரிதாபமாக பண ஆசையினால் அழிகிறது.

    Reply : 0       0

    frf, sri lanka Friday, 14 October 2011 12:13 AM

    அப்துல் மஜீத்தையும் தேசிய பட்டியல் மூலம் உறுப்பினராக்கி, அவருக்கும் இரண்டு வருடம் மேயர் பதவி கொடுக்கலாம்.... நல்ல கட்சிடா இது... நிசாம் வெற்றி பெற்றிருந்தால் இரண்டு வருட பேச்சுக்கே இடமில்லை....

    Reply : 0       0

    jiffry ahamed Friday, 14 October 2011 12:37 AM

    very good news for kalmunai peoples. do the hard work to make a new kalmunai city.

    Reply : 0       0

    palam Friday, 14 October 2011 01:26 AM

    இது ஜனநாயகத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் இடும் சவாலாகும்.....எவ்வாறெனில் அதிகூடிய விருப்பு வாக்கு பெற்றவருக்கு இரண்டு வருடம் மட்டும்தான் ஒதுக்கியது.......

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 14 October 2011 02:19 AM

    நல்லது நடக்கட்டும் தம்பி சிராஸ் கல்முனையை எந்தளவு முன்னேற்ற முடியுமோ அந்தளவு முன்னேற்றவும். அப்பதான் எல்லா மக்களின் நன் மதிப்பையும் பெறலாம்.

    Reply : 0       0

    kulathooran Friday, 14 October 2011 02:52 AM

    வாழ்த்துக்கள் சிராஸ், உங்கள் கன்னி தேர்தல் மகத்தான வெற்றி வான் சாட் (one shot) கன்னி சேவையையும் மாளிகைகாடு கேட் வே (Gate way)ல் "கல்முனை மாநகர் உங்களை வரவேற்கிறது" என தொடங்கி வையுங்கள். மாநகரின் தென்முனை எல்லை அல்லவா?

    Reply : 0       0

    Sanoon Mohideen Friday, 14 October 2011 03:23 AM

    வாழ்த்துக்கள் சிராஸ் பல்வேறு அழுத்தங்களுக்கு அப்பாலும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் எடுத்துள்ள இத்தீர்மானத்துக்கும் மக்கள் சிராஸ் மீது கொண்டுள்ள மிகப்பெரிய நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கும் வகையில் எதிர்கால செயற்பாடுகள் அமைய வேண்டும். மக்கள் பங்களிப்பு, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், போன்றவற்றுடன் மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவேண்டும் .
    வரும் நான்கு ஆண்டுகளும் கல்முனை மாநகரின் பொற்காலமாய் அமைய வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Raheem Friday, 14 October 2011 03:37 AM

    சாய்ந்தமருது மக்களுக்கு கிடைத்த vatritriya? இல்லை தலைவனுக்கு சவால் neenkiyathal கிடைத்த நிம்மதியா?

    Reply : 0       0

    uooran Thursday, 13 October 2011 09:54 PM

    வாழ்த்துக்கள் சிராஸ்!
    அரசியலுக்கு நீங்கள் புதியவராக இருந்த போதும் சாய்ந்தமருது மகன் ஒருவன் மேயராக வர வேண்டும் என்ற அந்த மக்களின் அபிலாசைகள் காரணமாக மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். கடந்த காலங்களில் அந்த ஆசனத்தை அலங்கரித்தவர்களால் சாய்ந்தமருது புறக்கணிக்கப்பட்டதால் ஏற்பட்ட உணர்வே நீங்கள் மேயராக தெரிவாக கரணம். இனி அவர்கள் விட்ட தவறுகளை நீங்கள் விடாது, அவர்களால் புரியப்பட ஊழல்களை கண்டு பிடித்து, அவர்கள் உங்களது விசுவாசி ஆனாலும் கூட தண்டித்து, உங்களது கதிரையை காத்துக்கொள்ளவும்.

    Reply : 0       0

    SIHABDEEN Friday, 14 October 2011 11:17 AM

    எமதூரில் ஒரு பழமொழி உண்டு. மூத்தபிள்ளைக்கு வண்டிக்காரனை மாப்பிள்ளை எடுத்தால் அவன் இளைய பிள்ளைக்கு கறத்த காரனை ககூட்டி வருவான் எண்டு.

    Reply : 0       0

    bishrullah Friday, 14 October 2011 02:21 PM

    அதற்கு முன், ஹசனாரின் இரண்டு வவருட எம்பி பதவிக்கு என்ன நடந்தது?

    Reply : 0       0

    Kalmunaimaatha Friday, 14 October 2011 04:24 PM

    இன்று சாய்ந்தமருது மக்கள் தாங்கள் வென்று விட்டதாக எண்ணி மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்... ஆனால் வென்றது பிரதேசவாதமும் பணமுமே!!
    உண்மையில் நிசாம் காரியப்பர் போன்ற ஒரு நல்ல தலைவரை இவர்கள் இரண்டு வருடங்களுக்கு இழந்துள்ளார்கள்... இதுவே உண்மை ... மீண்டும் ஊழல் அரங்கேறும் போதுதான் இவர்கள் உணர்ந்து கொள்வார்கள்..... அப்போது வெள்ளம் தலைக்கு மேலால் சென்று இருக்கும் . ஒற்றுமையாக இருந்த எமக்குள் இந்த பிரதேசவாதத்தை தூண்டிய சதிகாரன் யார் என கல்முனை மக்கள் அறிந்து விட்டார்கள் . சாய்ந்தமருது மக்கள் அறிய சில நாட்கள் அல்லது சில மாதங்கள் செல்லும்... அதுவரை நிசாம் சேருடைய சேவை உதவி மேயர் ஆக தொடரும்.

    Reply : 0       0

    mr harees Friday, 14 October 2011 05:58 PM

    நல்ல சிந்தனை.. வாழ்த்துக்கள் தலைவரே!

    Reply : 0       0

    Abdulsalam Friday, 14 October 2011 07:48 PM

    நல்ல முடிவு எமது பிரதேசத்துக்கு நல்லது நீடிக்க வேண்டும். உங்கள் சேவை இதைத்தான் நாங்கள் எல்லோரும் எதிர்பார்க்கின்றோம் சிராஸ். வாழ்த்துக்கள் எல்லா புகழும் அல்லாவிற்கு. அல்ஹம்துலில்லா.

    Reply : 0       0

    rasinona Friday, 14 October 2011 09:01 PM

    தலைவரின் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது கல்முனை
    பாவம் வோட்டு கேட்டே பலவருடம் காத்து இருந்து கை நழுவியது மேயர் கனவு.

    Reply : 0       0

    ras Friday, 14 October 2011 10:06 PM

    மரத்துக்கு வாக்களிக்காதவர்கள் பிரதேச வாதத்தை தூண்டிவிடுகிறார்கள். மக்கள் பார்த்து நடந்துகொள்ளுங்கள்.

    Reply : 0       0

    உங்கள் தோழன் Saturday, 15 October 2011 12:07 AM

    வாழ்த்துக்கள் நண்பர் சிராஸ் அவர்களுக்கு. கல்முனை மாநகரசபை என்பது நாம் இங்கு கொமண்ட் பண்ணும் சிலர் நினைக்கும் கேலிக்கூத்தான இடம் அல்ல. இது ஒரு மாநகரம் குட்டி நாடு என்றே சொல்லவேண்டும்.
    அப்படியான இந்த மாநகரத்தை ஆளும் தகுதி, அந்தஸ்து, திறமை, எல்லாரிடமும் வந்து விடாது. எனவே சகோதரர் சிராஸ் இன்று வெற்றி பெற்று இருக்கிறார். அவர் அவரின் திறமையினால் எந்தளவு மாநகரத்தை வளிநடத்த முடியுமோ அவரால் முடிந்தளவும் சபையில் உள்ள அனைவரின் ஆதரவுடன் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு இங்கு சிராஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் காங்கிரச் சரியாகத்தான் எல்லாவற்றையும் செய்கிறது, தலைமத்துவம் என்பது சிலர் நினைப்பது போன்று என்ன சில்லறைக்கடை முதலாளி போன்றதா? அதில் உள்ள சிக்கல், குழப்பம் அதனை வழி நடத்தும் தலைவருக்குத்தான் நன்றாகத் தெரியும். கல்முனையின் வெற்றி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசில் போட்டியிட்ட 25 வேட்பாளர்களின் உளைப்பினால் அவர்களுக்கு மக்கள் கொடுத்த செல்வாக்கு. மாறாக இது சிராஸின் அல்லது நிசாம் காரியப்பரின் தனி முயற்சி அல்ல. 25 வேட்பாளர்களின் அயராத முயற்சியின் பலன்தான் இன்று 11 உறுப்பினர்கள் வெற்றிபெற்றது. இதில் சிராஸ் மேயராக வந்ததும் 25 வேட்பாளர்களின் பங்கினால்தான். அவர்கள் இல்லையேல் இவர்களும் இல்லை என்றுதாம் சொல்ல வேண்டும். எனவே நான் என்னும் அகங்காரம் களைந்து நாம் என்னும் பொது சிந்தனையுடன் அனைவரும் நமது வெற்றிப்பயனத்தை நோக்கி பயணிப்போம்.
    அனைவரையும் மதித்து நடப்போம். மக்களுக்கு நல்லது செய்வோம். தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் நாம் நல்லது செய்தால் நிமிர்ந்து தைரியமாக நடக்கலாம்.

    Reply : 0       0

    ibnu aboo Saturday, 15 October 2011 02:27 AM

    இது ஆச்சரியமான, அல்லது தலைமைத்துவத்தின் சாணக்கியமான முடிவென்று பாராட்ட ஒன்றுமில்லை. கூடுதல் விருப்பு வாக்கெடுத்தவர் இயல்பாகேவே மேயர். ஹகீம் இரண்டாம் இடத்திற்கு வந்திருந்தாலும் கூடுதல் வாக்கெடுத்தவர்தான் மேயர். கூடுதல் வாக்கெடுத்தவர் இருக்கையில் இரண்டாவதாய் வந்தவர் அல்லது கட்சி செல்வாக்குள்ளவர் மேயராக தெரிவு செய்ய முயற்சிக்கும் செயல் சிறுபிள்ளைதனமாகும். இது ஜனநாயக விரோத செயல் என்பதை படித்தவர்கள் உணர வேண்டும்.

    Reply : 0       0

    vaasahan Saturday, 15 October 2011 05:19 AM

    மக்காள் சேர்ந்து வாழ்தால் சொன்னது நடக்கும். யாருக்கும் முடி சூட்டுவதற்காக சமூக சிந்தனை சிதறடிக்கப்படக்கூடாது. இரண்டுபேருமே இன்னும் இராஜ தந்திரத்துடன் முடிவை எடுத்திருக்கலாம். எனினும் வாழ்த்துக்கள்இ இந்த அளவுக்காவது விட்டுக்கொடுத்தமைக்கு. எல்லாத் தட்டையும் நிறுத்துப் பார்த்த ஹகீம் சும்மா சொல்லக்கூடாது சானக்கியனேதான்.

    Reply : 0       0

    ar.nila Saturday, 15 October 2011 03:01 PM

    வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Maruthoor. A.R.M Saturday, 15 October 2011 04:19 PM

    ஜனநாயகம் அற்ற முடிவு.....

    Reply : 0       0

    thowfeek Sunday, 16 October 2011 02:54 AM

    welcome siras sir and congratulation.

    Reply : 0       0

    thowfeek Sunday, 16 October 2011 02:57 AM

    tanks tank he is my gift our pepels

    Reply : 0       0

    manas Sunday, 16 October 2011 10:58 PM

    பிரதேசவாதத்துக்கு அப்பால் நின்று செயற்படக்கூடிய நிசாம் காரியப்பர் முழுமையான மேயராகாதது கல்முனையின் அபிவிருத்திக்கு இடப்பட்ட சவால். இதற்கு காரணம் சாய்ந்தமருது மக்கள் அல்ல.

    Reply : 0       0

    Maruthoor. A.R.M Thursday, 13 October 2011 08:35 PM

    இது மக்கள் தீர்ப்புக்கு முற்று முழுதாக மாற்றமான முடிவு....

    Reply : 0       0

    jaleel kwt Thursday, 13 October 2011 07:49 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    Doc - KSA Thursday, 13 October 2011 07:49 PM

    Congrats...

    Reply : 0       0

    nawshadn Thursday, 13 October 2011 07:51 PM

    சிறந்த தலைமைத்துவம் என்பதை ஹகீம் சார் நிரூபித்து விட்டார்.

    Reply : 0       0

    yaar Thursday, 13 October 2011 07:53 PM

    நல்ல முடிவாகினும் கட்சி கொஞ்சம் ஜாக்கிரதை ...

    Reply : 0       0

    aja Thursday, 13 October 2011 07:55 PM

    வாழ்த்துக்கள் siraz

    Reply : 0       0

    Janan Thursday, 13 October 2011 07:57 PM

    நல்ல முடிவு தலைவரே ! இப்பதான் சொன்னத செய்து இருக்கீங்க ...... இதுவே மக்களின் எதிர்பார்ப்பும் ....... பிரதேசவாதத்தை விட்டு அனைத்து முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்தால் எமக்கு எதிரான சக்திகளை முறியடிக்கலாம்.

    Reply : 0       0

    aLFA. Thursday, 13 October 2011 08:00 PM

    கடைசியில்.... !!! இந்த முடிவை எடுக்க ஏன் இந்த தாமதம் தலைமைத்துவத்துக்கு??! கல்முனை மக்கள் விழிக்க வேண்டிய நேரம்.. சிந்திக்க வேண்டிய தருணம்.. இன்று டயர் போடும் இவர்களே நாளை தோளில் வைப்பர் - இந்த தலைமைத்துவத்தை !!!!

    Reply : 0       0

    bis Thursday, 13 October 2011 08:10 PM

    இரண்டு வருடத்தில் எம்பி பதவியை காரியப்பருக்கு விட்டுக் கொடுப்பேன் என்ற அலியாரின் வாக்குறுதிக்கு என்ன நடந்தது?

    Reply : 0       0

    manithan Thursday, 13 October 2011 08:13 PM

    alhamthulillha!

    Reply : 0       0

    maazeen Thursday, 13 October 2011 08:14 PM

    இந்த முடிவில் உடன்பாடு இல்லை.
    இருப்பினும் சமூகத்தின் ஒற்றுமைக்காக ஒத்துக் கொள்கிறோம்.

    Reply : 0       0

    ramzin Thursday, 13 October 2011 08:15 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    FIROWS Thursday, 13 October 2011 08:21 PM

    சிராஸ் மீராசாஹிப் முதல் 2 வருடங்களுக்கும், அடுத்துவரும் 2 வருடங்களுக்கு நிஸாம் காரியப்பரும் மேயராகவும் செயற்படுவார்கள் என ரவூப் ஹக்கீம் அறிவி்த்துள்ளார். இது ஏற்கனவே நான் எதிர்பார்த்த முடிவுதான். ரவூப் ஹக்கீம் அவர்களே "நீதி அமைச்சர்" என்றால் இப்படித்தானா இருக்கவேண்டும்? இப்படித்தான் இருவருக்கும் நீதி வழங்கவீர்களா....?

    Reply : 0       0

    Abu. Mohd. Riyal Thursday, 13 October 2011 08:22 PM

    இது திருப்தி இல்லாத மேயர் தெரிவு 2 வருடங்களுக்கு சிராஸ், இரண்டு வருடங்களுக்கு நிசாம் அப்படி என்றால் அடுத்து வரும் இரண்டாண்டுகளுக்கு மூன்றாவதாக வந்த வருக்கா மேயர் பதவி ? ? ? மேயர் பதவி முற்று முழுதாக சிராசுக்கு வழங்கப்பட வேண்டும் .. அதுவரை எமது போராட்டம் தொடரும்...

    Reply : 0       0

    maruthooran Thursday, 13 October 2011 08:26 PM

    கூய் ................உருப்பட்ட மாதிருதான் .............. மீண்டும் பழைய பல்லவிதான்.

    Reply : 0       0

    Reesath Thursday, 13 October 2011 08:29 PM

    இது நல்ல முடிவு. காரணம் இரண்டு வருடமாக இவர் என்னே செய்றாரு என்று பார்ப்போம்.

    Reply : 0       0

    ramzin Thursday, 13 October 2011 07:47 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    sano Thursday, 13 October 2011 08:50 PM

    நல்ல முடிவு சிறப்பாக கடமையாற்ற எமது வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    umppa Thursday, 13 October 2011 08:52 PM

    இதுக்குத்தான் சொல்லுவது ஆத்திரப்பட வேண்டாமென்று ! நிசாம் யார் அவரின் முடிவு என்ன என்று தெரியாமல் உங்களை காட்டிக்கொடுத்துவிட்டீர்கள் . இருந்தாலும் அவரின் முழு ஆதரவும் இல்லாமல் கல்முனை மாநகரத்தின் வளர்ச்சி கேள்விக்குறிதான் ! உடன் சாய்ந்தமருது மக்கள் ஒன்றுபட்டு பாராட்டுவீர்கள் என எதிர்பார்க்கின்றோம் !வாழ்க கல்முனை மக்கள்.

    Reply : 0       0

    Izam Thursday, 13 October 2011 08:53 PM

    அதுவும் இரண்டு வருடத்துக்கு மட்டும்தானாம். பரவாயில்லை அதாவது கிடைத்ததே.

    Reply : 0       0

    Sahmy Thursday, 13 October 2011 08:56 PM

    குட் லக் டாக்டர் ஷிராஸ் ...... இவ்வளவு தூரம் தாமதிதிருக்க தேவை இல்லை ..... இருந்தாலும் நல்ல முடிவு . நன்றி ....

    Reply : 0       0

    kooll Thursday, 13 October 2011 08:57 PM

    வாழ்த்துக்கள் சிராஜ். ஜனநாயகம் நமது சமூகத்தில் இனியாவது நிலைபெறட்டும். முஸ்லிம்களின் தலைவராகும்.

    Reply : 0       0

    Sahmy Thursday, 13 October 2011 08:58 PM

    குட் லக் டாக்டர் ஷிராஸ் ......இவ்வளவு தூரம் தாமதிதிருக்க தேவை இல்லை .....இருந்தாலும் நல்ல முடிவு . நன்றி ....

    Reply : 0       0

    Sahib Thursday, 13 October 2011 09:05 PM

    வாழ்த்துக்கள் Mr.Siraaz

    Reply : 0       0

    Minsa Thursday, 13 October 2011 09:06 PM

    காலம் தாழ்த்தினாலும் தலைவரின் முடிவு சானக்கியமானது. வரவேற்கத்தக்கது. குழப்பம் விளைவிக்க முனைந்த சந்தர்ப்பவாதிகளுக்கு இது நல்ல சாட்டையடி.

    Reply : 0       0

    Amjath ULM Thursday, 13 October 2011 09:08 PM

    மாஷா அல்லாஹ்...
    தலைவரின் சாணக்கியமான, தைரியமான முடிவுக்கு நன்றிகள் கோடி.....
    சிராஸ் மற்றும் நிசாம் காரியப்பர் இருவரின் இணக்கப்பாட்டுடனான விட்டுகொடுப்பு சிறந்த அரசியல் பண்பை வெளிக்காட்டுகின்றது....

    Reply : 0       0

    iqbal Thursday, 13 October 2011 09:17 PM

    சபாஸ் தலைவா நல்ல முடிவை எடுத்திருக்கிறீர்கள் இல்லாவிட்டால் இன்னொரு பிரிவை சந்திக்க வேண்டி இருந்திருக்கும்.

    Reply : 0       0

    hani Thursday, 13 October 2011 09:32 PM

    பரவாயில்ல, சிறந்த சேவையை யார் செய்யபோகிறார் என்று பார்போம்.

    Reply : 0       0

    Ooran Thursday, 13 October 2011 09:46 PM

    அக்கிரமம்

    Reply : 0       0

    pasha Thursday, 13 October 2011 09:51 PM

    ஏன் இந்த இரண்டு வருட தவணை.

    Reply : 0       0

    Rakkish.. Thursday, 13 October 2011 09:52 PM

    வாழ்த்துக்கள் சிராஸ், பிரதேச வாதம் கடந்த சேவைக்கு நீ உன்னை அர்ப்பணிக்க இறைவன் துணை புரிய வேண்டும்.. உன் சேவையினால் பிரதேசவாதிகளின் முகங்களில் கரியினை பூச வேண்டும்.. உன்னால் ஒன்று முடியவில்லயென்றால் வழிவிடு திறமைக்கு..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X