2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'அம்பாறையில் பூர்த்தி செய்யப்படாதுள்ள பாடசாலை கட்டிங்களை நிர்மாணிக்க நிதி ஒதுக்கப்படும்'

Kogilavani   / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)
அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் பூர்த்தி செய்யப்படாமல் காணப்படும் கட்டிடங்களை பூர்த்தி செய்வதற்கென 2012ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்து தருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

எதிர்வரும் 2012ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சம்பந்தமான ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான ஆலோசனைக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தின்போது ஜனாதிபதி உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில்  நீண்ட காலமாக பல கட்டிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் காணப்படுவதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்ககைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து உடனடியாக இது சம்பந்தமான விபரங்களை தனக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு பூர்த்தி செய்யப்படாமல் காணப்படும் கட்டிடங்களின் விபரங்களை சம்பந்தப்பட்;ட பாடசாலைகளின் அதிபர்கள் தனக்கு அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ஒலுவில், நிந்தவூர், அட்டப்பள்ளம் போன்ற பிரதேசங்களில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அட்டப்பள்ளம் மாட்டுப்பள்ளத்திலுள்ள 500 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டள்ளதால் விவசாயிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக நடவடிக்கையினை தான் எடுப்பதாக தெரிவித்ததாகவும்  நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • soori Saturday, 22 October 2011 03:01 AM

    அமைச்சர்கள், மந்திரிமார்கள் எதையல்லாம் செய்துவிட்டார்கள்? இவர் இபோதுதான் கண் திறந்துள்ளார். யாரவது புத்தி கூறி பயப்படுத்தியிருப்பார்கள் அல்லது அடுத்த தேர்தல் வரப்போகிறதோ தெரியாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .