2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரச அதிபர் கடமையை பொறுப்பேற்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 14 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நீல்த அல்விஸ் இன்று திங்கட்கிழமை  மாவட்ட செயலகத்தில்  தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

முன்னர் வடமத்திய மாகாணசபையின் பிரதி செயலாளராக கடமையாற்றிய இவர், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தராவார்.

புதிய அரசாங்க அதிபரை வரவேற்கும் வைபவம் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் உதவி அரசாங்க அதிபர் அசங்க அபேவர்த்தன தலைமையில் நடைபெற்றது.  இதில் மதத்தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக பல வருட காலமாக கடமையாற்றிய சுனில் கன்னங்கர இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • min Monday, 14 November 2011 08:33 PM

    புதிய அரசாங்க அதிபார் அஸ்ரப் நகர் மக்களுக்கு நல்லதொரு முடிவை தருவர் என்று எதிர்பார்கிறோம்.

    Reply : 0       0

    meenavan Monday, 14 November 2011 08:54 PM

    சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டதிக்கு,பெரும்பான்மை மொழி பேசும் அல்விஸ் ஏன் ஒரு அன்வரையோ, அச்சுதனையோ நியமிக்க முடியாது? மகி சிந்தனையில் உள்ளடக்கவில்லையோ? அஸ்ரப் நகர மக்கள் பிரச்சினை வேதாளம் முருங்கை ஏறிய கதைதான்.

    Reply : 0       0

    அதிரடி Monday, 14 November 2011 09:36 PM

    correct அங்க வேணுமென்றால் எதிர்பார்க்கலாம்.

    Reply : 0       0

    mubarac Tuesday, 15 November 2011 04:52 AM

    அஸ்ரப் நகர் மக்களை நிம்மதியா வாழ எல்லா மந்திரிமாரும் சேர்ந்து கத்துங்க சார். என்ன சரி ஒங்களுக்கு ஒரு பதில் தருவாங்க சார்.

    Reply : 0       0

    kalmunaiyaan Tuesday, 15 November 2011 07:37 AM

    இவரின் தவறில்லை...இது அரசியல்வாதிகளின் தவறு....முஸ்லிம் காங்கிரஸின் ஆலோசனை இன்றி இருக்கும் இந்த நியமனத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் தான் மக்களுக்கு பதில் தரவேண்டும்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .