2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அம்பாறையில் மர நடுகைத் திட்டம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 15 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ், எஸ்.மாறன், ஹனீக் அஹமட்)

இன்று அனுஸ்டிக்கப்படும் 'தயட்ட செவண' தேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தை முன்னிட்டு காலை 9.01 மணிக்கு அம்பாறையின் பல்வேறு பிரதேசங்களிலும் கல்முனை பிரதேச செயலகத்திலும், மாநகரசபை வளாகத்திலும் மரநடுகை நிகழ்வுகள் இடம்பெற்றன.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையிலும், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.ஜே.லியாகத் அலி தலைமையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபை, பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.வை.சலீம், உதவி பிரதேச செயலாளர் ஏ.எல்.அஸ்மி, பிரதேச
உதவிதிட்டமிடல் பணிப்பாளர் யு.எல்.ஏ.ஹாசன், தலைமைபீட சமுர்த்தி முகாமையாளர் என்.ஜே.எம்.நிஹ்மதுல்லா உட்பட பிரதேச செயலக பதவிநிலை அதிகாரிகள் கலந்துகொண்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் மரக்கன்றுகளை நாட்டிவைத்தனர்.

இதேவேளை, 'பசுமையான நாடு, வளமான தேசம்' எனும் தொனிப் பொருளிலான 'தேசத்துக்கு நிழல்' (தயட்ட செவண) தேசிய மர நடுகை வேலைத் திட்டத்துக்கிணங்க, அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மர நடுகை நிகழ்வொன்று இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.எல்.கே. முகம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0

  • faizmohamed Tuesday, 15 November 2011 09:19 PM

    மரம் நமது வரம்.

    Reply : 0       0

    mohammed Ashraff Tuesday, 15 November 2011 10:50 PM

    நீங்கள் மரங்களை நடுவது முக்கியம்தான். அதற்கு நீர் ஊத்துவது யார்?
    இவ்வாறு பலமுறை நாட்டப்பட்ட மரங்கள் அடுத்த நாளே கருகிபோச்சு.

    Reply : 0       0

    mohammed Ashraff Tuesday, 15 November 2011 11:08 PM

    நல்லா போஸ் கொடுகிறாங்கள்

    Reply : 0       0

    samsudeen Wednesday, 16 November 2011 11:31 AM

    இது போட்டோவுக்கான மரம்... நிரந்தர மரம் நட இடமேது...

    Reply : 0       0

    mbm Wednesday, 16 November 2011 10:15 PM

    மரம் நாட்டுவது போட்டோவுக்காக அல்ல! நிழலுக்காகவும். நல்ல சூழலுக்காகவும் தான் என்பதனை நம்மூர் அதிகாரிகள் எப்பதான் புரிந்துகொள்ளப் போகிறார்களோ தெரியல்ல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .