2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'அட்டாளைச்சேனையில் பொதுச்சந்தை அமைக்கும் திட்டம் இழுத்தடிப்பு'

Menaka Mookandi   / 2011 நவம்பர் 17 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

'நீண்ட காலமாக அட்டளைச்சேனை பிரதேச மக்களின் அத்தியாவசிய தேவையாக இருந்து வரும் 'பொதுச் சந்தை' ஒன்றினை அமைக்கும் திட்டத்தினை கிழக்கு மாகாண சபை கடந்த 03 மாதங்களுக்கு மேலாக இழுத்தடித்து வருவது அரச அபிவிருத்திக் கொள்கையின் அடிப்படைகளை உதாசீனம் செய்வதாக அமைந்துள்ளது' என அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் ஜனாப் எஸ்.எல்.எம்.பளீல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'இந்தப் பொதுச்சந்தையினை அமைப்பதற்கான திட்டம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக 'நெல்சிப் திட்ட அமைப்பின்' அனுசரணையோடு அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

மேலும், இது தொடர்பில் மக்களின் அபிப்பிராயங்களைக் கருத்தறிதல், திட்ட முதன்மை முக்கியத்துவம், திட்ட வரைவு என்பவற்றிற்காக கூடுதலான பணமும், காலமும் பிரதேச சபையினால் செலவிடப்பட்டுள்ளது. 'நெல்சிப்' நிறுவனம் மக்களின் கருத்தறிந்து 'அவசர திட்ட முன்னுரிமை'யைப் பெறுவதற்காக பல கலந்துரையாடல்களையும், ஆய்வுகளையும் கடந்த காலங்களில் இதற்காக் மேற்கொண்டது.

அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் ஒருமித்த இணக்கப்பாட்டுடன் பொதுச் சந்தைக்கான தேவையினையும், அதனை நிர்மாணிப்பதற்குரிய இடமான பிரதேச சபைக்குச் சொந்தமான காணியின் அமைவிடத்தின் வரைபப்டத்தினையும் பிரதேச சபை முன்வைத்தது.  திட்டத்தின் தேவைப்பாடுகள், நிபந்தனைகளை நிறைவு செய்ததன் அடிப்படையில் 'நெல்சிப் நிறுவனம்' சந்தைக் கட்டிட நிர்மாணத்துக்கான பண ஒதுக்கீடான 15 மில்லியன் ரூபாவினை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரதேச சபைக்கு வழங்கியது.

ஆயினும் இப் பணத்தினைப் பயன்படுத்தி, மக்களின் முக்கிய தேவையான பொதுச் சந்தை நிர்மாண வேலைகளை ஆரம்பிக்கும் அனுமதியினை வழங்காமல் - கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் இழுத்தடித்து வருவது மக்களிடையே விசனத்தையும், நம்பிக்கையின்மையையும் உருவாக்கியுள்ளது.

கடந்த காலத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் பிரதேச மக்களினால் நிராகரிக்கப்பட்ட, செல்வாக்கற்ற இப் பிரதேச மாகாண அமைச்சர் ஒருவரினால்தான் இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. அட்டாளைச்சேனை சந்தைக் கட்டிட நிர்மாணம் தொடர்பில் பொருத்தமற்ற யதார்த்தத்திற்கு ஒவ்வாத காரணங்களைக் கூறி, மாகாண முதலமைச்சரை -  பிழையாக வழிநடத்தும் இப்பிரதேச அமைச்சரின் செலுக்கு எதிராக மக்கள் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

பிரதேச சபைகளின் ஊடாக அடிமட்டத்திலிருந்து மக்களின் ஒத்துழைப்போடு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டுமெனும் - ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் அபிவிருத்திக் கொள்கைக்கு முரண்பாடாக மாகாண அமைச்சர் செயற்படுகின்றாரா? என்று மக்கள் வினா எழுப்பி வருகின்றனர்.

உண்மை யாதெனில் இந்த அமைச்சரின் கருத்தை கேட்பதற்கு மக்கள் தயாராக இல்லை. ஏனெனில் அட்டாளைச்சேனை பிரதேச மக்களில் பெரும்பான்மையானோர் இந்த அமைச்சரை தேர்தல்களில் புறக்கணித்தே வருகின்றனர். 'குண்டுச்சட்டிக்குள் குதிரையோடும்;' சிறுமையான அரசியலே இவரின் இயல்பான பண்பு என்பதை இச் செயல் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றது.

இந்த சந்தைக் கட்டிடத்தைக் குறித்த இடத்தில் நிர்மாணிப்பதற்கு பிரதேச மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு, அனைத்துப் பள்ளிவாசல் அனுமதி போன்றவை இருப்பதை கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு -  பிரதேச தவிசாளரும், அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழுவினரும் பலமுறை சுட்டிக் காட்டியிருந்த போதிலும், இத்திட்டத்துக்கான அனுமதியை இன்னும் இழுத்தடித்து வருவது 'அபிவிருத்தி என்பது மக்களுக்காக அல்ல, ஆனால், மாற்று நோக்கங்களுக்காக' என்ற பிரதேச  அமைச்சரின் முரண்பாடான நோக்கப்பாட்டை வெளிக்காட்டி நிற்கின்றது.

ஆகவே 'நெல்சிப்' நிறுவனம் இந்த யதார்த்தங்களை உணர்ந்து மக்களின் தேவைக்கு முன்னுரிமை வழங்கும்  தங்களின் அடிப்படை நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமென்றும், |குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இப் பிரதேசத்தில் வாழும் சுமார் 50,000 க்கு மேற்பட்ட மக்களுடைய முக்கிய தேவையினை உணர்ந்து, அதற்கு மதிப்பளித்து மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கிழக்கு முதலமைச்சர் அவர்கள், பொருளாதார அமைச்சரின் அங்கீகாரம் பெற்ற இந்த 'பொதுச் சந்தை' திட்டத்திற்கு தனது உடன்பாட்டினை உடன் வழங்க வேண்டுமென இப்பிரதேச மக்களின் சார்பில் வேண்டுகோள் விடுப்பதாக செயலாளர் பளீல் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • min Saturday, 19 November 2011 06:58 AM

    நாங்கள் இவர்களை கணக்கிலும் கூட எடுக்கவில்லை ஹ ஹ சிராஜ். (பாஷா, அங்காடி ) இவங்களுக்கு அரசியல் புதுசு அப்பா அனுபாவம் பத்தாது!!!!

    Reply : 0       0

    senaiyuraan Sunday, 20 November 2011 05:08 AM

    வாக்கு போட்டு கை தேய்ந்தாலும் அக்கட்சியால் புறக்கணிக்கப்படுவது அட்டளைச்சேனை மட்டும்தான் என்பதை நாம் இன்னும் மறக்கவில்லை. தேர்தல் வந்தால் வீரப்பேச்சு காணி சுவிகரித்தால் மௌனம் மக்களின் வாக்குகள் வாயை அடைத்துவிட்டா?

    Reply : 0       0

    senaiyuraan Sunday, 20 November 2011 01:53 AM

    சிராஜ் .......காசி வந்தால் வேலையை செய்றதுதானே. அதை விட்டுப்போட்டு மாகாண அமைச்சரும் மத்திய அமைச்சரும் தடை என்னுகின்றீங்க நீங்களும் அரசின் பங்காளி கட்சிதானே உங்களுக்கும் அதிகாரம் அமைச்சர் உண்டுதானே அந்த அதிகாரத்தினால் இந்த தடையை நீக்குங்கள் ஊரின் நலனுக்காக !

    Reply : 0       0

    min Saturday, 19 November 2011 11:05 PM

    மிஸ்டர். பாஷா உங்கட கமெண்ட்ஸ் எங்க யாருக்கும் புடிக்கல்ல. இது நம்ம பொது இடத்தில் கமெண்ட்ஸ் பண்ணுறம் ஷோ நீங்க மரியாதயை கடைபிடிக்க வேண்டும்! அட்டளைச்சேனையில் சந்தை அமைப்பாது மக்களின் விருப்பம் அதற்கு நெல்சிப் நிறுவனம் பணம் ஒதுக்கி உள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும் மாகாண அமைச்சரோ இல்ல மத்திய அமைச்சரோ இல்லை அதற்கு தடைபோடாமல் இருந்தால் போதும். நங்கள் யாரிடமும் கெஞ்ச தேவை இல்லை, முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் சரி. இதை பற்றி விளங்காமல் கமெண்ட்ஸ் பண்ண வேண்டாம்!

    Reply : 0       0

    angaady Saturday, 19 November 2011 09:54 PM

    சிராஜ் நீங்க சொல்வதுபோல நீங்க வாக்குபோட்டு உங்களுக்கு ஒரு எம். பி யும் இன்னுமில்ல. ஏதாவது அவங்க செய்த ஒரு அபிவிருத்தி என்றாலும் பரவாயில்ல. நீங்க சொல்லுங்க நாங்க கேட்கிறோம்..... இது ஒன்றுமே இல்ல . எலெக்சன் வந்தா வருவாங்க... முடிஞ்சா ஆக்கள அட்ரசையும் காணோம்.

    Reply : 0       0

    சிறாஜ் Saturday, 19 November 2011 09:21 PM

    நான் ஒரு முட்டாளுங்க, நல்லா படிச்ச நம்முட அங்காடி அண்ணன் சொன்னாரு ,நான் ஒரு முட்டாளுங்க. மத்தவண்ட பிள்ளைக்கெல்லாம் பேருவைக்கப் போவாங்க நாங்க சொன்னால் சொந்தம் என்றும் சொல்லுவாங்க, நான் ஒரு முட்டாளுங்க,
    பக்கத்து வீட்டு மாமி நடக்கமுடியாமல் இருப்பது தெரியாது, அயல் ஊரு குமரு நடந்து கடைக்குப்போவது பொறுக்காது. இவங்களுக்கு நான் ஒரு முட்டாளுங்க. இந்த நல்லாப்படிச்ச நம்முட அங்காடி மாமா சொன்னாரு. ஹா ஹா ஹா ஹா நல்லா படிக்கவும் பேசவும் பழகுங்க.

    Reply : 0       0

    nanpan, add Saturday, 19 November 2011 07:32 PM

    சரியான பதில் சிராஜ்..

    Reply : 0       0

    அதிரடி Saturday, 19 November 2011 05:50 PM

    @ Pasha நீ ஒரு லூசா???/ என்று நான் கேட்கவில்லை..

    இந்த ஊரை பொறுத்தவரை நாங்கள் நன்றாகத்தான் இருக்கிறோம். நாங்க எதுக்குடா அடுத்த ஊரு அமைச்சர பார்க்கணும்? பொது சந்தை அது அடுத்த ஊரு ஆஆமாஐச்சாஆர் (சாரி அமைச்சரைதான் அப்படி எழுதுபட்டுவிட்டது) கேட்காமலே வரும் நீ பாரு கொய்யாலே/

    Reply : 0       0

    angaady Saturday, 19 November 2011 02:14 PM

    சிராஜ் உங்களுக்கு ஐந்து அறிவு என்று எல்லாருக்கும் விளங்குது. அது மட்டுமல்ல உங்களுக்கு ஒரு பக்கம்தான் வேலை செய்ற மட்ட பக்கம் அடிபட்டுட்டு. எனவே ஒழுங்கா COMMENTS பண்ண பழகுங்க. வாய்க்கும் மூளைக்கும் சம்பந்தமா COMMENTS பண்ணுங்க.

    Reply : 0       0

    min Friday, 18 November 2011 02:21 AM

    அட்டளைச்சேனை போதுச்சந்தெய் அமைக்க முட்டுகட்டை போடும் அமைசர் அவர்களே இது உங்களின் கவனத்திற்கு. அரசியல் உங்களுக்கு இத்துடன் முடிவடைவது இல்லை நீங்கள் மேலும் மக்களின் ஆதரவு தேட வேண்டும். அட்டளைச்சேனை மக்கள் முட்டாள்களும் இல்லை. நீங்கள் கூறுவதை கேட்டு இருப்பாவர்களும் இல்லை உடனடியாக இததை உடனடியாக நிறைவேற்றுவீர்கள் என்று எதிர்பார்கிறோம் இது அட்டளைச்சேனை மக்களின் சார்பாக!!!

    Reply : 0       0

    சிறாஜ் Saturday, 19 November 2011 05:05 AM

    அங்காடி என்றால் இருக்க இடமில்லாமல் அலைந்து திரியும் வியாபாரி என்று பொருள். அப்படியான ஒரு லூசி என்னமோ சொல்லி இருக்கும். தலை பழுதாகிட்டோ தெரியவில்லை.

    Reply : 0       0

    சிறாஜ் Saturday, 19 November 2011 05:00 AM

    pasha, angaady இவர்கள் இரண்டு பேருக்கும் மூளையல்ல என்று சொல்வதனை விட தலையே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏன் என்றால் அட்டாளைச்சேனை மக்கள் ஒரு நாளும் இந்த மாகாண அமைச்சரையோ மத்திய அமைச்சரையோ எதற்கும் நாடவும் இல்லை. அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவும் இல்லை. இவர்களின் அரசியல் வங்குறோத்து இதில்தான் நன்றாக விளங்குது.

    Reply : 0       0

    angaady Friday, 18 November 2011 09:59 PM

    இந்த கட்சிக்கு வாக்களித்து கை தேய்ந்தது மாத்திரம்தான் இவர்களுக்கு மிச்சம். இவர்களுக்கு வேற ஒன்றுமே கிடையாது...! வோட்டு போட்டு போட்டு ஒரு எம். பி கூட எடுக்க முடியாம கடைசியில ஏமாந்து போனவங்கதான் இவங்க....... ஐயோ இவங்க நிலமைய யாருக்கிட்டதான் சொல்லலாம்............?

    Reply : 0       0

    pasha Friday, 18 November 2011 08:47 PM

    மாகாண அமைச்சரை அட்டாளைச்சேனை பெற்றுள்ளது மிகப் பெரிய விடயம். இதை புரிந்து கொள்ளாமல் சந்தை கேட்டு அடம் பிடிப்பது நல்லதல்ல. சந்தை வேண்டும் என்றால் அருகில் உள்ள ஊரில் உள்ள மத்திய அமைச்சரை அல்லது நீங்கள் தொடர்ந்து வாக்குகள் அளிக்கும் Kachchi தலைவரை கேட்கலாம்.

    Reply : 0       0

    ameerudeen Friday, 18 November 2011 06:11 PM

    என்ன கொடும சார்?

    Reply : 0       0

    Uran Friday, 18 November 2011 05:02 PM

    கொந்தராத்து

    Reply : 0       0

    asmeer Friday, 18 November 2011 06:29 AM

    தயவு செய்து சிந்தித்து செயற்படுங்கள். நல்லது நடக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .