2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் – கல்முனை பிரதி மேயர் சந்திப்பு

Super User   / 2011 நவம்பர் 22 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.ஜெஸ்மின், அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரென்கினிற்கும் கல்முனை பிரதி மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதில் பொது செயலாளர் நாயகமுமhன நிஸாம் காரியப்பருக்குமிடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை கல்முனையில் நடைபெற்றது.

இதன்போது, யுத்தம் மற்றும் சுனாமி ஆகிவற்றுக்கு பின்னரான சூழ்நிலையில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் பொருளாதார, சமூக கலாசார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் உயர் ஸ்தானிகருக்கு விளக்கியதாக சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

அத்துடன் பாதுகாப்பு, வியாபாரம், கல்வி, குடியிருப்பு மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் மற்றும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் உயர் ஸ்தானிகருக்கு எடுத்து கூறியதாக அவர் குறிப்பிட்டார்.  

சுனாமியினால் பாதிக்கப்பட்டு இறைவெளி கண்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள சிறார்கள் கல்வி கற்பதற்காக அமைக்கப்பட்டுள்ள றோயல் கல்லூரியின் கட்டுமான பணிகள் தொடர்பிலும் பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்கு எடுத்துக் கூறியாதாக நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.

சுமார் ஒரு மணித்தியாலயம் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவு செயலாளரான ஷாரா மென், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏம். பறக்கத், எம்.சாலிதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • hameed Wednesday, 23 November 2011 01:26 AM

    இதுதான் தேவை கல்முனைக்கு.

    Reply : 0       0

    meenavan Wednesday, 23 November 2011 01:39 AM

    இது எப்படி இருக்கு? காலையில் மேயர் விமான நிலைய சிநேகபூர்வ சந்திப்பு, பிற்பகலில் பிரதி மேயர் பிரித்தானிய தூதுவர் சந்திப்பு அம்பாறை மாவட்டத்தில், யுத்தம், சுனாமி பின்னரான சூழ்நிலையில் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார, குடியிருப்பு, பாதுகாப்பு விடயமான பேச்சு வார்த்தை. ஒரே கட்சி பிரதிநிகள் இரு வேறு சந்திப்புகளை தூதருடன் நடாத்தினால் மாநகர அபிவிருத்தி...........?

    Reply : 0       0

    சிறாஜ் Wednesday, 23 November 2011 02:08 AM

    ஹி ஹி ஹி இது எல்லாம் வெறும் சந்திப்பு. என்ன நடக்குது என்று முதலில் பாருங்கப்பா. முதல்ல ஏதாவது நல்லது செய்து காட்டுங்க.

    Reply : 0       0

    riyas Wednesday, 23 November 2011 02:36 AM

    சிநேகம் அல்ல உத்தியோகபூர்வ சந்திப்பு. இதுதான் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.

    Reply : 0       0

    Birdeye Wednesday, 23 November 2011 03:47 AM

    இதுவரை நாம் இவர் அவரை சந்தித்தார், அவர் இவரை சந்தித்தார் என்றுதான் கேள்விபட்டோமே தவிர, இவர் இந்த திட்டத்தை செய்தார், அந்த திட்டத்தை செய்தார் என்று இதுவரை பதிவுகள் இதுவும் இல்லை...... செயலில் காட்டுங்கள் .......

    Reply : 0       0

    hameed Wednesday, 23 November 2011 05:29 AM

    மேயர் ஓடு பாதையில் சந்திச்சார்.... பிரதி மேயர் உத்தியோகபோர்வமாக சந்திச்சார்.

    Reply : 0       0

    akm.jiffry Wednesday, 23 November 2011 05:45 AM

    இதை எல்லாம் விட்டுட்டு செயலில் காட்டுங்கள் பாப்பம்.

    Reply : 0       0

    razeek kalmunai Wednesday, 23 November 2011 06:21 AM

    ஹமீது படம்பிடித்து உலகெங்கும் பார்க்கும் தமிழ் மிரரில் போடுவதுதான் கல்முனைக்கு?

    Reply : 0       0

    Doc - KSA Wednesday, 23 November 2011 08:07 AM

    Poly + Tricks = Politics, Fantastic. Probably MC commissioner (with his team) may meet with HC at his resident in Colombo. Can public understand the worth of those different meetings?

    Reply : 0       0

    uooran Wednesday, 23 November 2011 07:41 PM

    இப்படியான சந்திப்புக்களையாவது தம்பிக்கிளி ஆட்சியில் காணக்கிடைக்கவில்லை.

    Reply : 0       0

    செம்பகம் Wednesday, 23 November 2011 10:24 PM

    இதற்கு முதலிருந்த முதல்வர்மார் இப்படியான ஒரு சந்தி்பினை சந்தித்த வாரலாற்றினை காணக்கிடைக்கல்லையே? ஏன் அவியளுக்கு மொழி ஒரு பிரச்சினையோ தெரியவில்லை ..........?

    Reply : 0       0

    kalmunaiyaan Wednesday, 23 November 2011 10:36 PM

    சந்திப்பு சோறு போடாது படித்தவரே?

    Reply : 0       0

    faiz Thursday, 24 November 2011 01:26 AM

    நல்லது தொடரட்டும் வாழ்த்துகள்.

    Reply : 0       0

    vaasahan Thursday, 24 November 2011 07:31 PM

    அனேகமாக கமென்ட் அடித்த எல்லோருமே இப்பிராந்தியத்தை சேர்ந்தவர்களே. இப்பிராந்தியத்தை சேர்ந்தவர்களுக்கு வாழ்த்துக்கூறி பார்க்க ஏன் மனம் வருவதில்லை. பொலிடிகல் மெச்சுரிட்டி என்ற பேரில் ஒரு அரசியல் குருட்டுத்தனம் யாவரிடமும் வளர்க்கப்பட்டுள்ளதா?

    Reply : 0       0

    ummpa Thursday, 24 November 2011 08:23 PM

    Vaasahan, நீங்கள் சரியாக சொன்னிர்கள். இதுதான் கொஞ்சம் சிந்தித்து எழுதுங்க . அப்பத்தான் கருத்தின் வடிவம் மற்றவர்களுக்கும் புரியும். அத்துடன் உங்கள் கருத்துக்கள் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இது சும்மா குடும்ப சண்டை மாதரி சித்திரம் கீறும் சுவர்போல இருக்கிறது .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X