2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திவிநெகும தேசிய திட்டம் குறித்து விழப்புணர்வூட்டும் கூட்டம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 13 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


குடும்ப பொருளாதாரத்தினையும் போசாக்கையும் மேம்படுத்துவதற்கான - ஐம்பது லட்சம் மனைப் பொருளாதார அலகுகளை விருத்தி செய்யும் திவிநெகும தேசிய திட்டம் குறித்து விழப்புணர்வூட்டும் கூட்டமொன்று நேற்று திங்கட்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனைப பிரதேசத்தில் சமுர்தி உதவிபெறும் பயனாளிகளுக்கு, அம்பாறை மாவட்ட செயலகத்திலிருந்து வருகை தந்திருந்த அதிகாரிகளால் மேற்படி கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.

திவிநெகும திட்டத்தின் ஊடாக குடுபங்களின் போசாக்கினை மேம்படுத்துதல், வருமானத்தை உயர்த்துதல், ஆரோக்கியமான இல்லத்தைக் உருவாக்குதல் இவற்றினூடாக சுபீட்சமான தேசமொன்றைக் கட்டியெழுப்புதல் போன்றவற்றுக்கு சமுர்திப் பயனாளிகளைத் தயார்படுத்தும் வகையில் இங்கு அதிகாரிகளால் கருத்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இதேவேளை, மேற்படி திவிநெகும திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிர் விதைகளை சிறப்பாகப் பயன்படுத்துவது குறித்தும் அதனூடாக உச்ச பயனை அடைந்து கொள்வது தொடர்பிலும் இங்கு பயனாளிகள் அறிவுறுத்தப்பட்டனர்.

இக் கருத்தரங்கில், அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், அம்பாறை மாவட்ட செயலக கணக்காய்வு உத்தியோகத்தர் ஏ.ரகுமான், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிச் செயலாளர் வி.ரூபன் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பட்டதாரிப் பயினுநர்கள் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .