2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 15 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை, சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் அபிவிருத்தி சபையினருக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீலுக்குமிடையிலான சந்திப்பு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியும் அபிவிருத்தி சபையின் தலைவருமான டாக்டர் என்.ஆரிப் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், வைத்தியசாலையின் பௌதீகவள அபிவிருத்தி தொடர்பிலும் வைத்தியர் மற்றும் ஊழியர் பற்றாக்குறை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. மேற்படி விடயங்கள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுப்பதாக  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் இதன்போது உறுதியளித்தார். 


You May Also Like

  Comments - 0

  • meenavan Thursday, 15 November 2012 01:41 PM

    பாராட்டத்தக்க முயற்சி. இதில் எந்த அளவு வெற்றி கிட்டும்....? திவிநேகும சட்டமூலத்தின் பாதகம் தெரியாமல் ஆதரவு அளித்தவர்கள்....மாகாண சுகாதார அமைச்சர் மு.கா.வை சேர்ந்தவர் என்பதனால் குறைகள் நிறைவேருவதட்க்கு சாத்தியம் இருந்தாலும் நிகழ்தகவு பூச்சியம் காரணம் மந்திரிபதவியில் முட்டிமோதி கொண்டவர்கள்.....?

    Reply : 0       0

    ameen Saturday, 17 November 2012 05:02 PM

    ஏதோ நல்லது நடந்தால் சரி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .