2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'திரிய பியச' திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் 'திரிய பியச' வீடமைப்புத் திட்டத்தின் கீழ் சமுர்த்தி அதிகார சபையின் ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை பயனாளிக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளியிடம் வீட்டின் சாவியினை சம்பிரதாயபூர்வமாகக் கையளித்தார்.

இந் நிகழ்வில், அட்டாளைச்சேனை உதவப் பிரதேச செயலாளர் வி. ரூபன், சமுர்த்தி முகாமையாளர்களான எம். தஸ்லிம், ஏ.எம். ஹமீட், மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

திரிய பியச வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஓவ்வொரு வருடமும் ஒவ்வொரு பிரதேச செயலத்திலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இவ்வாறு வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .