2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் தோற்கடிப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று திங்கட்கிழமை சபையில் முன்வைக்கப்பட்ட நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 4பேர் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்ததை அடுத்து வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

இப்பிரதேச சபையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றி ஆட்சிஅமைத்து செயற்பட்டு வருகின்ற நிலையில், சபையின் மாதாந்த அமர்வு நேற்று திங்கட்கிழமை பிரதேச பொது நூலக கேட்போர் கூடத்தில் தவிசாளர் க.இரத்தினவேல் தலைமையில் நடைபெற்றது.

இச்சபையமர்வில் தவிசாளர், உப தவிசாளர் மற்றும் ஆளுஹ்கட்சி உறுப்பினர்களும் எதிக்க்;கட்சி உறுப்பினர்களுமாக 9 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன்போது தவிசாளரால் 2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து இவ்வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றுவதற்கான சபை அமர்வு எதிர்வரும் 31 ம் திகதி திங்கட்கிழமை நடாத்த ஏனைய சபை உறுப்பிர்கள் தீர்மானிக்கப்பட்டு சபை அமர்வுகள் முடிவுற்றன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X