2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெள்ளம் வடிந்தோட நீர்த்தாவரங்கள் தடையாக உள்ளன

Kogilavani   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச நெல்வயல்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் வடிவதற்கு நீர்த்தாவரங்கள் தடையாக உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மாவட்டத்தின் மேற்குப் புறமாக அமைந்துள்ள நெல் வயல்களில் நிரம்பியுள்ள வெள்ள நீரானது,  கால் வாய்கள் மற்றும் ஆறுகள் மூலமாக வடிந்து சென்று கடல் பகுதியை அடைய வேண்டியுள்ளது.

ஆயினும், ஆற்று வாழை மற்றும் சல்பீனியா போன்ற நீர்த்தாவரங்கள் வயலில் உள்ள நீர் வடிந்தோடும் பகுதிகளில் மிக அதிகளவு வளர்ந்து காணப்படுவதால் வயல் பகுதிகளிலுள்ள வெள்ள நீர், மிகக் குறைந்தளவிலேயே வடிந்து வருவதாக விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

குறிப்பாக, அட்டாளைச்சேனைப் பகுதியிலுள்ள மீனோடைக்கட்டு பிரதான கால்வாய் பகுதியில் மிக அதிகளவு ஆற்றுவாழை எனும் நீர்த்தாவரம் செறிந்து வளர்ந்துள்ளமையினால் அப் பகுதியிலுள்ள நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதில் பாரிய தடையேற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் மிக அதிகளவு நெல்வயல்கள் அட்டாளைச்சேனை விவசாயப் பிராந்தியத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X