2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சாய்ந்தமருது பீச் பார்க் வேலைகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி

Super User   / 2013 ஜூலை 31 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற சாய்ந்தமருது பீச் பார்க் அபிவிருத்தி வேலைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் என கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தரின் முறைப்பாட்டிற்கு அமைய கல்முனை பொலிஸாரினால் பீச் பார்க் கட்டுமானம் தொடர்பில் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவிருந்தது. இந்த நிலையில் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபின் நகர்வு மனு திறந்த மன்றில் இன்று புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது தமதுபக்க சட்டத்தரணி மூலம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்து மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பினை சமர்ப்பித்து விண்ணப்பம் செய்தபோது மேற்கண்ட தீர்ப்பினை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கியது.

குறித்த பீச் பார்க் கட்டுமானத்திற்கு பொலிஸார் எந்தவித தடைகளையும் விதிக்கக்கூடாது எனவும் பொலிசார் தடைகளை விதிக்கும் பட்சத்தில் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தமாறும் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறும் இதன்போது தெரிவிக்கப்ட்டது.

சாய்ந்தமருது ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் கல்முனை தொகுதி அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்ஹரீஸ் தலைமையில் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களின் முன்னிலையில் நடபெற்ற பீச் பார்க் கட்டுமானம் தொடர்பில் கரையோர பாதுகாப்பு அதிகாரி ஏற்படுத்தும் தடைகளை முடிவிற்கு கொண்டுவரும் கலந்துரையாடலில் உடன்பாடுகள் எட்டப்பட்டு நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்ட்டிருந்தது.

பின்னர் மீண்டும் கரையோர பாதுகாப்பு அதிகாரி பொலிஸாருக்கு விடுத்த முறைப்பாட்டினால் நிர்மாணப் பணியினை மேற்கொண்டிருந்த மேசன்மார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதனால் நிர்மானப் பணிகளுக்கு மீண்டும் தடைவிதிக்கப்பட்து. இவ்வாறு சாய்தமருது பீச் பார்க் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களில் பீச் பார்க் கட்டுமானம் தொடர்பில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வேலைத்திட்டத்திற்காக நெல்சிப் திட்டத்தின் மூலம் 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நவம்பர் மாதத்திற்கு முன்னதாக சகல வேலைகளும் பூர்த்தியடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த காலக்கேட்டிற்கு முன்னர் வேலைத்திட்டம் பூர்த்தியடையாவிட்டால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி திரும்பிவிடும் நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .