2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வடக்கு - கிழக்கு இணைப்பு; முஸ்லிம் மக்கள் கட்சி எதிர்ப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களை இணைக்கு முயற்சிக்கு முஸ்லிம் மக்கள் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இந்த செயற்பாடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏதேச்சதிகார முயற்சி எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கிழக்கு மாகாணம் வட மாகாணத்துடன் இணைந்திருந்த 20 வருட காலம் என்பது கிழக்கு முஸ்லிம்களின் இருண்ட காலமாகவே இருந்த வரலாற்றை நாம் மறந்து விட முடியாது.

இத்தகைய நிலைக்கு புலிகள் மட்டுமல்ல மேலாதிக்க சிந்தனையுள்ள வட பகுதி அரச ஊழியர்களும் பிரதான காரணமாக இருந்தார்கள். இந்த யதார்த்த நிலையை கருத்திற்கொண்டு கிழக்கு முஸ்லிம்களுக்கு தனியான மாகாண நிர்வாக சபை ஒன்றை வழங்காமல் கிழக்கை வடக்குடன் இணைப்பதை எதிர்க்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல முஸ்லிம் பிரதேசங்களையும் இணைத்து தனியான நிர்வாக சபை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் உறுதியான கொள்கையாகும்.

இதனை நிர்வகிப்பதில் எந்த சிக்கலும் வராது. எவ்வாறு கல்முனை பிரதேச செயலகம் இரண்டாக பிரிக்கப்பட்டு தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேச செயலகங்கள் இயங்குகிறதோ அதே போன்ற ஒரு நடைமுறையை கிழக்கு மாகாணத்திற்குள்ளும் தனியாக ஏற்படுத்த வேண்டும்.

இதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளாத வரை வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் அனுமதியளிக்க முடியாது" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .