2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

'அம்பாறையின் கரையோரப் பிரதேச நெல் உற்பத்தி நிலங்கள் சதுப்பு நிலங்களாக உள்ளன'

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கல்லோயாத் திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்தின் நெல் உற்பத்தி கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டபோதிலும், மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் சில நெல் உற்பத்தி நிலங்கள் சதுப்பு நிலங்களாக பாதிக்கப்பட்டுள்ளன என அம்பாறை மாவட்ட பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.வீரசிங்க தெரிவித்தார்.

மத்திய, மாகாண நீர்ப்பாசன திணைக்களங்களின் ஏற்பாட்டில் நேற்;று திங்கட்கிழமை அட்டாளைச்சேனையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நீர்ப்பாசன வார ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

கல்லோயாத் திட்டத்தின் மூலம் சதுப்பு நிலங்களாக மாறியிருக்கும் 8,500 ஏக்கர் விவசாய நிலங்களை மீண்டும் நெல் உற்பத்திக்கு பயன்படுத்தும் வகையில் சம்புக்களப்பு வடிச்சல் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு சுமார் 300 மில்லியன் ரூபா உத்தேச மதிப்பீட்டுத் தொகை தேவை எனக் கோரப்பட்டுள்ளது. இதற்கான முழு நிதியினைஇயும் ஒரே தடவையில் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதால் கட்டம் கட்டமாக இந்த வடிச்சல் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

முதல் கட்டமாக நாம் மேற்கொண்டுவரும் நடவடிக்கையின் மூலம் இவ்வடிச்சலுக்குரிய சாத்திய வளக்கூறுகளை அறிய முடியும். இதன் மூலம் சில பாதிப்புகள் ஏற்படலாம். திட்டம் முழுமையாக இன்னும் கொண்டு செல்லப்படவில்லை.

கிழக்கு மாகாண நீக்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை இவ்வேலைத்திட்டத்தின் மூலம் பல தனிப்பட்டவர்களின் எதிர்ப்புக்களுக்கு ஆளாகி உள்ளார்.

குறிப்பாக கோணாவத்தை ஆறு பலராலும் சுவீகரிக்கப்பட்டு  அசுத்தப்படுத்தப்பட்டபோது அவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து தடைகளை அகற்றி இன்று அபிவிருத்தி செய்து அழகுபடுத்தி உள்ளார். இதனை எதிர்த்தவர்கள் இன்று அங்கு சென்று இளைப்பாறிவருகின்றனர்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, நீர்ப்பாசன திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எஸ்.திலகராஜா, கல்முனை பிராந்திய பிரதிப் பணிப்பாளர் யூ.எல்.நஸார், பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .