2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று கல்வி வலயம் சாதனை

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
 
கிழக்கு மாகாண 17 கல்வி வலயங்களிலும் வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பெறுபேற்றின் அடிப்படையில், அக்கரைப்பற்று கல்வி வலயம் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது என அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம் தெரிவித்தார்.
 
அட்டாளைச்சேனை கோட்டத்திற்குட்பட்ட பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசியர், மாணவா்கள் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
 
இக்கல்வி வலயம் மாகாண மட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக சாதனை படைத்து வருகின்றது. இதன் சாதனைக்கும், பெருமைக்கும் அத்திவாரமாக இருப்பவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுமே ஆவர்.
 
எனவே இவ்வாறான பட்டத்திற்கும், பெருமைக்கும் உடையவர்கள் இவ்வலயத்திலுள்ள மாணவர்களும், ஆசிரியர்களுமே ஆகும். அந்த வகையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த ஒவ்வொரு மாணவனும் இந்த வெற்றிக்கு பங்களிப்புச் செய்துள்ளான்.
 
ஒரு பாடசாலையினது கல்வி வளர்ச்சியில் அப்பாடசாலை சமூகம் அக்கறை கொண்டிருக்குமாயின் நல்ல அடைவுகளை காணமுடியும். அந்தவகையில் மாணவா்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள் நல்லுறவு அமைய வேண்டும்.
 
எமது வலயத்தில் எதிர்வரும் ஆண்டில் சில மாற்றங்களை ஏற்படுத்த எண்ணி உள்ளோம். அந்த வகையில் எல்லா பாடசாலைகளும் சிறந்த வெளியீட்டினை கொண்டமைந்தனவாக மாற்றி அமைக்கப்படும்.
 
இதற்காக சமவளப் பங்கீடுகள் மற்றும் ஆசிரியர்கள் இடமாற்றக் கொள்கை, பாடசாலைகளின் வளர்ச்சிக் கணிப்பீடு என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.
 
இதற்காக ஒரு பாடசாலையில் நீண்டகாலமாக அல்லது தொடர்ச்சியாக சேவையாற்றி வரும் ஆசிரியர்கள், அதிபர்கள் இடமாற்றக் கொள்கைக்கு அமைய மாற்றம் செய்யப்படவுள்ளனர் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X