2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுகாதாரத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

Kanagaraj   / 2014 ஜூலை 02 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


கல்முனை மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் முக்கிய கலந்துரையாடல், மாநகர முதல்வர் செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடல் மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் மேற்படி சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எஸ்.லோகநாதன், செயலாளர் அப்துல் வஹாப், டெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் சார்பில் பாக்கியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் மாநகர சபையின் பிரதி முதல்வர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ், உறுப்பினர்களான ஏ.அமிர்தலிங்கம், ஏ.ஏ.பஷீர், ஏ.எம்.பரக்கத்துல்லா, எம்.எஸ்.உமர் அலி, கமலதாசன், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.அசார், பதில் சட்ட அதிகாரி சட்டத்தரணி எம்.பி.எம்.பௌசான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபையில் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்ற தற்காலிக சுகாதாரத் தொழிலாளர்களின் நிரந்தர நியமனம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டு, சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .