2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதி முதல்வராக எம்.ஐ.எம்.பிர்தௌஸ் சத்தியப் பிரமாணம்

Kogilavani   / 2014 ஜூலை 04 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக எம்.ஐ.எம்.பிர்தௌஸ், மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் முன்னிலையில் இன்று (5) சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை(04) காலை கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.நசார்தீன், ஏ.அமிர்தலிங்கம், எம்.ஜெயக்குமார், கே.விஜயரட்ணம், கமலதாசன், ஏ.எச்.எம்.நபார், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அஸுஹர், கணக்காளர் எச்.எம்.றசீட், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுச் செயலாளர் எம்.எம்.றபீக் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் கலந்துசிறப்பித்தனர்.

அங்கு முதல்வர் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பிர்தௌஸ், தனது ஆதரவாளர்களினால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் இமாம் மௌலவி எம்.ஐ.எம்.ஆதம்பாவா துஆப் பிரார்த்தனையை நடாத்தி வைத்தார்.

ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், அக்கட்சியின் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளராகவும் கட்சியின் அதியுயர் பீட உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றார்.

1994ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்  போட்டியிட்டு கல்முனை பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த இவர் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு கல்முனை மாநகர சபை உறுப்பினராக தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .