2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரண்டாம் கட்ட மீன்பிடி வள்ளங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு

Gavitha   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்
,ரஸீன் ரஸ்மின்

புத்தளம் நகர மீனவர்களுக்கு இரண்டாம் கட்டமாக மீன் பிடி வள்ளங்கள் மற்றும் வலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வும் புத்தளம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டார் மீனவர் சங்கத்துக்கான சன சமூக நிலைய கட்டட திறப்பு விழாவும் வியாழக்கிழமை (16) மாலை புத்தளம் கடற்கரை வெட்டாளை பிரதேசத்தில் இடம்பெற்றது.

ஏற்கெனவே புத்தளம் பகுதி மீனவர்களுக்கு 72  மீன்பிடி வள்ளங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இம்முறை மேலும் 108 வள்ளங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

மின்சக்தி எரி சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் சுமார் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இந்த வள்ளங்களும் வலைகளும் வழங்கப்பட்டுள்ளன.

புத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸின் முயற்சியின் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர 'குடும்பத்துக்கு ஒரு உதவி' திட்டத்தின் கீழ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட அபிவிருத்தி திட்டத்தின் கீழும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் மின்சக்தி எரி சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரின் 2 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில், புத்தளம் கடற்கரை பாதைகள் அபிவிருத்தி, மின்சார விநியோகம், ஒவ்வொரு வீடுகளுக்கும் சுய தொழில் வேலை வாய்ப்புக்கான உதவிகளை வழங்கல் என பல்வேறு அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புத்தளம் ஸ்டார் மீனவர் சங்கம், வலம்புரி மீனவர் சங்கம், அல் அமீன் மீனவர் சங்கம், நியூ வளர்பிறை மீனவர் சங்கம், நியூ அம்பர் மீனவர் சங்கம், உதவும் கரங்கள் மீனவர் சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு இந்த மீனவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், புத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ், வடமேல் மாகாண விவசாய, மீன்பிடி, கால் நடை உற்பத்தி, சிறு நீர்ப்பாசன மற்றும் கமநல அபிவிருத்தி அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா, புத்தளம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் அருள்தாசன், புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் டொனில் போபஸ், புத்தளம் நகர சபை உறுப்பினர்  டி. முஜாகிதுல்லாஹ் உள்ளிட்ட இலங்கை மின்சார சபையின்  அதிகாரிகள்  பலரும் கொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .