2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உள்ளூராட்சி சபை அமைப்பது தொடர்பில் உறுதியளிப்பு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


கல்முனை தமிழ்ப் பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தலைமையிலான தமிழ் புத்தி ஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புக்களைக் கொண்ட குழுவொன்று ஞாயிற்றுக்கிழமை(20) உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா உல்லாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பு அக்கரைப்பற்று மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.

கல்முனை தமிழ் பிரதேசத்துக்கான தனியான உள்ளூராட்சி சபையொன்றை அமைப்பதற்கு தன்னாலான முழு உதவியையும்  வழங்குவேன் என இதன்போது உள்ளூராட்சி, மாகாண சகைள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா உறுதியளித்தார்.

மேலும் தமிழ் பிரதேச உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் ஆளணிப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, கட்டட வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினரால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதனை கருத்தில்கொண்டு, உள்ளுராட்சி மன்றங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய காங்கிரஸூடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன செயற்படுவதெனவும் அதற்கான புரிந்துணர்வு பேச்சுவார்த்தையும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .