2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாகனங்களில் ஒலி பெருக்கி பொருத்தத்தடை

Gavitha   / 2015 ஜனவரி 28 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில், அனுமதியின்றி சட்டவிரோதமாக வாகனங்களில் ஒலிபெருக்கிகளை பொருத்திக் கொண்டு வியாபாரம் செய்வது எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக, ஆலையடிவேம்பு பிரதேசசபை உபதவிசாளர் சி.சியாம் சுந்தர் தெரிவித்தார்.


மேலும் அதனை மீறி செயற்படுவோர் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்திலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில், அண்மைக்காலமாக அனுமதியின்றி சட்டவிரோதமாக இரவு பகல் நேரங்களில், பழைய இரும்பு வியாபாரி தொடக்கம் பேக்கரி உணவு பொருட்கள் விற்போர் என வௌ;வேறு பிரதேசங்களில் வியாபாரம் செய்கின்றார்கள்.


இது அதிகாலை 5 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10 மணிக்கே ஓய்வு பெருகின்றது.


இதனால், நோயாளர்கள், அதிகாலை, இரவு நேரங்களில் கல்விகற்கும் மாணவர்கள், சிறுகுழந்தைகள் போன்றோரின் அமைதிக்கு பெரும்பங்கம் ஏற்பட்டு வருகின்றது. இவ்வியாபார நடவடிக்கையை தடைசெய்யுமாறு பொதுமக்கள் எம்மிடம் பல முறைப்பாடுகளை செய்து வருகின்றனர்.


எனவே, பொதுமக்களின் நன்மைகருதி சட்டத்துக்கு முரனான இவ்வாறான வியாhர நடவடிக்கையில் ஈடுபட்டுவதற்கு எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .