2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பரிசளிப்பு நிகழ்வு

Thipaan   / 2015 ஜனவரி 29 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்ட விசேட தேவையுடையோர் வலையமைப்பின் ஏற்பாட்டில், வலுவிழப்புடன் கூடிய பிள்ளைகளின் ஆக்கத்திறன் போட்டியின் இறுதிநாள் பரிசளிப்பு நிகழ்வு கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் புதன் கிழமை (28) இடம்பெற்றது.

அமைப்பின் தலைவரும் பிரதிக் கல்விப்பணிப்பாளருமான டாக்டர் உமர் மௌலானா, சம்மாந்துறை வைத்தியசாலையின் உளவளத்துறை பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஜ.நௌபல் ஆகியோர் இந்த நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தனர்.

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் மற்றும் வினைத்திறன் விருத்தி, ஆளுமை விருத்தியினை அதிகரிக்கும் நோக்கில் போட்டி நிகழ்ச்சிகளையும், வெற்றி பெற்ற மாணவர்களை பரிசில்கள் வழங்கி கௌரவித்து ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு கல்வி நடவடிக்கைகளில்  மாணவர்களை ஈர்க்கச் செய்யும் நடவடிக்கையினையும் விசேட தேவையுடையோர் வலையமைப்பு முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .