2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பால்நிலை சார்ந்த வன்முறைகளை தடுப்பதற்கான வலையமைப்பு

Administrator   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்துக்குட்பட்ட சிறுவர் மற்றும் பெண்களின் பால்நிலை சார்ந்த வன்முறைகளை தடுப்பதற்கான வலையமைப்பு, சனிக்கிழமை (07) கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.


கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.அமீர், கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜுட்சன், உளநல வைத்திய நிபுணர் டாக்டர் யூ.எல்.சராப்தீன், சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சுல்தான், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கபார், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் யூ.எல்.அசாருதீன், மாவட்ட மனித அபிவிருத்தி தாபன உதவி இணைப்பாளர் எம்.ஐ.றியாழ், பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொது நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .