2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொற்றா நோய் சிகிச்சை முகாம்

Princiya Dixci   / 2015 ஜூலை 27 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்திலுள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் பேக்கரி ஆகியவற்றிலுள்ள ஊழியர்களுக்கான தொற்றா நோய் சிகிச்சையும் உடற் கூற்றுப் பரிசோதனையும் அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (27)  நடைபெற்றது. 

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகமும் அட்டாளைச்சேனை பிரதேச சபையும் இணைந்து அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முன்னெடுத்துள்ள மக்களுக்கான ஒருங்கினைந்த சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

சுகாதார வைத்தியதிகாரி டாக்கடர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இச்சிகிச்சை முகாமில் உயர் குருதி அழுத்தம், கொலஸ்ரோல் மற்றும் சர்க்கரை வியாதி போன்ற நோய்கள் பரிசோதிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதோடு மருத்துவச் சிகிச்சையும் அளிக்கப்பட்டன.

31 ஊழியர்களுக்கு தொற்றா நோய் தொடர்பான பரிசோதணை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சிகிச்சை வழிகளும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்தியதிகாரி டாக்கடர் ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .