2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் சோதனை

Suganthini Ratnam   / 2015 ஜூலை 30 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்துக்கு  வியாழக்கிழமை திடீர் விஜயத்தை மேற்கொண்ட சுகாதார அதிகாரிகள், அங்கு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மீன்பிடித் துறைமுகத்தில் மீன் சேகரிக்கும் நிலையத்தில் வெட்டப்படுகின்ற மீன்களின் கழிவுகளை சரியான முறையில் அகற்றாமையால், அங்கு துர்நாற்றம் வீசி சுகாதாரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இந்தச் சோதனையை மேற்கொண்டதாக அட்டாளச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்கடர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

மீன் சேகரிப்பு நிலையத்தில் மீன்கள் வெட்டுவதற்கு தடைசெய்யப்பட்ட போதிலும், அதனையும் மீறி வியாபாரிகள் செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனவே, குறித்த பிரதேசத்தை ஒருவார காலத்தினுள் சுத்தமாக்குமாறும் கழிவுநீரை சீரான முறையில் அகற்றுவதற்கு துறைமுக அதிகாரசபையினர் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இதனை மீறும் பட்சத்தில் துறைமுக அதிகார சபையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .