2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ.மு.காவின் கோட்டைகள் சரியத்தொடங்கியுள்ளன

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டைகள் சரியத்தொடங்கியுள்ளதாக தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் தேசியப்பட்டியல் வேட்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது உருவாக்கப்பட்டன்  நோக்கத்திலிருந்து வழிமாறிப் பயணிக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸின் கோட்டைகளாக திகழ்ந்த சாய்ந்தமருது, சம்மாந்துறை, பொத்துவில், இறக்காமம் போன்ற பிரதேசங்கள் அதன் செல்வாக்கை இழந்து நிற்கின்றன' என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து, வியாழக்கிழமை இரவு(6) அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் சமூகத்துக்கு  பாதுகாப்பாக இருந்து முஸ்லிம் மக்களின் நலனில் அக்கறை கொண்டதொரு இயக்கமாக இருப்பதற்காக மர்ஹூம் அஸ்ரப் மக்காவில் பிரார்த்தார்.

அதேவேளை இவ்வியக்கம் முஸ்லிம் சமூகத்தின் நலன்களை புறக்கணித்து பிழையான பாதையில் செல்லுமாயின் இறைவான அதனை அழித்து விடு என்றும் கேட்டிருந்தார்.

தொடர்ச்சியாக நமது கிழக்கு மாகாண மக்களை முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றி வந்ததனால் இன்று முஸ்லிம் காங்கிரஸின் இதயமான அம்பாறை மாவட்டத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது' என்றும் அவர் கூறினார்.
 
'இன்று இப்பிரதேசங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களாக மாறி உள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இப்பொதுத் தேர்தலில் ஆதரவு வழங்குவதாகவும் குருநாகல் மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆதரவு வழங்குவதாகவும் அறிவிக்கும் நிலமை தற்போது ஏற்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது மற்றும் பொத்துவில் பிரதேச மக்கள் தொடர்ச்சியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர்' என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .