2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் 32ஆவது வருட நிறைவு விழா

Super User   / 2011 ஜூன் 12 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார்)

 

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் 32ஆவது வருட நிறைவு விழாவும், சமூக சேவையாளர் பாராட்டு நிகழ்வும் இன்று காலை அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் ஆலோசகர் எம்.ஐ.உதுமாலெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின் போது அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அங்கத்தவர்களாகவிருந்து மரணித்தவர்களுக்கு விசேட துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்நிகழ்வின் போது நிவாரணம் வழங்கியதுடன் 32 சமூக சேவையாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்படனர்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் ரசீத் எம்.இம்தியாஸ் முன்னணியின் செயலாளர் லுக்மான், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்கள்.


You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Tuesday, 14 June 2011 03:48 AM

    அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இன்னும் உயிரோடு இருப்பதை இந்த செய்தியால் தான் அறிந்தேன் . அது இருக்க வாலிப முன்னணியில் வயோதிபர்களுக்கு என்ன வேலை .இந்த வீ ஐ பிகள் முஸ்லிம் சமமூகத்துக்கு என்னசெய்து கிழித்தார்களாம்? இந்த சுயநல கும்பல் தானே முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு அடையாளம் தந்தவரும் நிகரில்லா சேவை செய்து முஸ்லிம்களின் இதயத்தில் வாழ்பவபருமான சமூகப் பணியிலேயே தன் இன்னுயிர் நீத்த தியாகி மர்ஹும் அஷ்ரப் அவர்களை நாடாளுமன்றத்திலும் மட்டும் அல்லாது சென்றவிடமெல்லாம் எதிர்த்தவர்கள் .

    Reply : 0       0

    vaasahan Monday, 04 July 2011 09:34 PM

    எனக்கும் ஞாபகம் உள்ளது. யாழ் முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டபோது அந்த கழிவிரக்கம் நிறைந்த சம்பவத்தை வெறும் அஷ்ரப் எதிர்ப்பு அரசியலாக்கி ஆடிய ஆட்டம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .