2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அம்பாறையில் 359,138 பேர் வாக்களிக்க தகுதி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 16 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு மாநகரசபை, ஒரு நகரசபை மற்றும் 17 பிரதேசசபைகளுக்கும் 182 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 359,138 பேர் வாக்களிக்கவுள்ளனர்.


அக்கரைப்பற்று மாநகரசபைக்கு ஒரு கட்சியில் அல்லது சுயேட்சைக் குழுவில் 12 பேர் போட்டியிட்டு இதில் 09 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதில் 05 இளைஞர்களும், ஏனையோர் 07 பேரும் போட்டியிடுவர். அம்பாறை நகரசபைக்கு இளைஞர்கள் 05 பேரும் ஏனைய 07 பேருமாக 12 பேர் ஒரு கட்சியில் அல்லது சுயேட்சைக் குழுவில் போட்டியிடலாம். இதில் 09 பேர் தெரிவு செய்யப்படுவர்.

தெஹியத்துக்கண்டிய பிரதேசசபைக்கு 21 பேரை தெரிவு செய்ய 11 இளைஞர்களும் ஏனைய 16 பேர் உட்பட மொத்தமாக 27 பேர் ஒரு கட்சியில் அல்லது சுயேட்சைக் குழுவில் போட்டியிடலாம். உகன பிரதேசசபைக்கு 15 பேரைத் தெரிவு செய்ய 08 இளைஞர்களும் ஏனைய 12 பேர் உட்பட மொத்தமாக 20 பேர் ஒரு கட்சியில் அல்லது சுயேட்சைக் குழுவில் போட்டியிடலாம்.

பதியத்தலாவ மற்றும் லகுகல பிரதேச சபைகளுக்காக 11 பேரைத் தெரிவு செய்ய 06 இளைஞர்களும் ஏனைய 09 பேர் உட்பட மொத்தமாக 15 பேர் ஒரு கட்சியில் அல்லது சுயேட்சைக் குழுவில் போட்டியிடலாம். மகாஓயா பிரதேசசபைக்கு 10 பேரைத் தெரிவு செய்ய 05 இளைஞர்களும் ஏனைய 08 பேர் உட்பட மொத்தமாக 13 பேர் ஒரு கட்சியில் அல்லது சுயேட்சைக் குழுவில் போட்டியிடலாம்.

சம்மாந்துறை, நாமல் ஓயா, தமன, பொத்துவில், திருக்கோவில், ஆலையவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசசபைகளுக்கு 09 பேரைத் தெரிவு செய்ய 05 இளைஞர்களும் ஏனைய 07 பேர் உட்பட மொத்தமாக 12 பேர் ஒரு கட்சியில் அல்லது சுயேட்சைக் குழுவில் போட்டியிடலாம். அக்கரைப்பற்று, நிந்தவூர், நாவிதன்வெளி மற்றும் இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளுக்கு 07 பேரைத் தெரிவு செய்ய 04 இளைஞர்களும் ஏனைய 05 பேர் உட்பட மொத்தமாக 09பேர் ஒரு கட்சியில் அல்லது சுயேட்சைக் குழுவில் போட்டியிடலாம். காரைதீவு பிரதேசசபைக்கு 05 பேரைத் தெரிவு செய்ய 03 இளைஞர்களும் ஏனைய 04 பேர்  ஒரு கட்சியில் அல்லது சுயேட்சைக் குழுவில் போட்டியிடலாம்.

அக்கரைப்பற்று மாநகரசபை, சம்மாந்துறை, பொத்துவில், அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேசசபைகளுக்கு நியமனங்களைத் தாக்கல் செய்யும் சுயேட்சைக் குழுவொன்றின் வேட்பாளர்களினால் 3000 ரூபாய் வைப்புத்தொகை செலுத்தப்பட வேண்டும். நாவிதன்வெளி, இறக்காமம்,அக்கரைப்பற்று நியமனங்களைத் தாக்கல் செய்யும் சுயேட்சைக் குழுவொன்றின் வேட்பாளர்களினால் 2250 ரூபாய் வைப்புத் தொகை செலுத்தப்பட வேண்டும்.

காரைதீவு பிரதேச சபைக்கு நியமனங்களைத் தாக்கல் செய்யும் சுயேட்சைக் குழுவொன்றின் வேட்பாளர்களினால் 1750 ரூபாய் வைப்புத் தொகை செலுத்தப்பட வேண்டும். எதிர்வரும் 26ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்த முடியும்.

புதிய இறக்காமம் மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேச சபைகள் என்பனவற்றுக்கு முதன் முறையாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இதேவேளை, கல்முனை மாநகரசபையின் பதவிக் காலம் மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளது. அதன் பின்னரே இச்சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .