2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

37 வருட கல்வி சேவையிலிருந்து ஓய்வு பெறும் அதிபருக்கு பாராட்டு விழா

Kogilavani   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை அல் - முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் அதிபர் கே.எம்.சுபையிர் ஆசிரியர் சேவையிலிருந்து இளைப்பாறுவதை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை பாடசாலை மண்டபத்தில் சேவை நலன் பாராட்டு விழா இடம்பெற்றது.

'ஒரு வரலாற்றுக்கு வரலாற்று விழா' எனும் தலைப்பில் நடைபெற்ற இவ் விழாவில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம் பிரதம அதிதியாகவும், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். அஹமட் கியாஸ் விசேட அதிதியாகவும், அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.கே.எம். இப்றாகிம் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

அதிபர் கே.எம் சுபையிர் கல்வி நிர்வாக சேவை முதல் தரத் தகைமையினைக் கொண்டு விளங்குகின்றார்.  37 வருட கல்விச் சேவையினைக் கொண்ட இவர் 18 வருடங்கள் ஆசிரியராகவும் 19 வருடங்கள் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

மேலும், 1993 ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும், 1993 ஆம் ஆண்டு  முதல் 2000 வரை அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியில் விரிவுரையாளராகவும் இவர் கடமையாற்றினார்.

பின்னர், 2000 ஆம் ஆண்டு முதல் இளைப்பாறும் வரை அட்டாளைச்சேனை அல் முனீறா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிய இவர் முதற்தர அதிபர் தரத்தினைக்  கொண்டவராவார்.

மேற்படி, விழாவில் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.     

     


You May Also Like

  Comments - 0

  • Doc - KSA Friday, 07 October 2011 10:22 PM

    Congrats. Great event. May god bless him always. Let him continue his valuable service to the community.

    Reply : 0       0

    mansoorcader Friday, 07 October 2011 11:49 PM

    ஒரு சிறந்த கல்வியியலளரும் கல்வி நிர்வாகியுமான சுபைர் அவர்களின் ஒய்வு உண்மையில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தும். வாழ்க நலமுடன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X