2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

4 காட்டு யானைகள் உள்நுழைந்ததால் மக்கள் அச்சம்

Super User   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தீகவாபி குடியிருப்பு பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் புதன்கிழமை(2) 4 காட்டு யானைகள் உட்பிரவேசித்ததால் மக்கள் பெரும் அச்சமடைந்து, பட்டாசு கொழுத்தியும், குரவையிட்டும் துரத்தியிருந்தனர்.

இது தொடர்பாக அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஏ.எல். லயனல் விக்ரமசிங்கவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்கையில்,

தீகவாபி பிரதேசத்தில் தொடர்ந்தும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும், அதனால் அண்மைக்காலமாக 15க்கும் மேற்பட்ட வீடுகளும், பல வீட்டுத் தோட்டங்களும் சேதமடைந்துள்ள நிலையிலுள்ளன. கடந்த வாரம் யானையின் தாக்குதலுக்கு உள்ளான குடும்பஸ்தர் ஒருவர் இன்னும் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.

தீகவாபி எல்லைக் கிராமங்கள் காடுகளும், புற்தரைகளும், மலைகளும் காணப்படுவதால் பகல் வேளைகளிலேயே பதினைந்துக்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக படையெடுத்து வருகின்றன.

இவ்வாறான அச்ச நிலைகுறித்து அப்பிரதேச மக்கள் யானைகளிலிருந்து தங்களையும், தங்கள் உடமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர்.

இதனையடுத்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்திரருந்தனர். இதற்கான தீர்வினை மிகவிரைவில் மேற்கொள்வதாகவும் அரசாங்க அதிபர் நீல்த அல்விஸ் இதன் போது உறுதியளித்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .