2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பகிடிவதை குற்றச்சாட்டில் தென்கிழக்கு பல்கலையின் 64 மாணவர் இடைநிறுத்தம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 17 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா, எஸ்.எம்.எம்.றம்ஸான்)

தென் கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவியொருவரை நான்கு மாணவர்கள் இணைந்து பகடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் 75 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக குறித்த பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

குறித்த மாணவர்களை உடனடியாக கல்வி நடவடிக்கையில் உள்வாங்குமாறு கோரிக்கை விடுத்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் சம்மாந்துறையிலுள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்னால் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலாம் வருடத்திற்காக புதிதாக அனுமதிக்கப்பட்ட  மாணவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.

புதிதாக முதலாம் வருடத்திற்கு இணைக்கப்பட்டுள்ள மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கு சென்ற இரண்டாம் வருட மாணவர்கள் சிலர்  பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர் என்று பல்கலைகழக நிர்வாகத்திற்கு வழங்கிய அநாமதேய தகவலையடுத்தே இந்த வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாணவ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

குறித்த முறைப்பாடு தொடர்பாக எந்தவித விசாரணைகளையும் நடத்தாமலேயே பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை இடைநிறுத்தியுள்ளனர் என அவர்கள் குறிப்பிட்டனர். இதேவேளை, அடுத்த மாதம் பரீட்சை நடைபெறவுள்ள நிலையிலேயே இம்மாணவர்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாணவ பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0

  • ஸ்ரிளின்கா Friday, 18 November 2011 02:53 AM

    ஆர்பாட்டம் செய்யப்பட்ட உண்மையான நோக்கத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் .பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களை மட்டும் தண்டிக்காமல் அனைத்து மாணவர்களையும் தண்டிப்பது எவ்வகையில் நியாயம் ? பகிடிவதையுடன் தொடர்புடைய நான்கு மாணவர்களை மட்டும் தண்டிப்பதை விடுத்து முழு மாணவர்களையும் தண்டிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

    Reply : 0       0

    rishan Monday, 21 November 2011 03:48 AM

    ///idu ellam theveyi thana? vandomma padichchoma, nattukku sevayi senjomma yendru irukkanum//

    if you feel hurt in my comments
    sorry for that.

    Reply : 0       0

    pasha Friday, 18 November 2011 08:40 PM

    ராகிங் பண்ணுவதிலாவது முன்னிலை பல்கலை கழகமாய் திகழ்வதை இட்டு நாம் மகிழ்ச்சி அடைதல் வேண்டும்.

    Reply : 0       0

    ashraf akkaraipattu Friday, 18 November 2011 08:05 PM

    ithu ellam thevai thaana?

    Reply : 0       0

    ameerudeen Friday, 18 November 2011 06:27 PM

    பகிடி என்பது வேறு. வதை என்பது வேறு. ஒரு மாணவனையோ மாணவியையோ வதைப்பது எந்த விதத்தில் பகிடியாகும்? இதற்குப் பெயர் பகிடிவதை. பல்கலைக்கழக மாணவர்கள் எப்போதும் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். கேவலமான செயல் இனியும் எம்மவரிடம் வேண்டாம். நடப்பவைகள் நல்லவைகளாக இறைவன் துனைபுரிவானாக.

    Reply : 0       0

    M.A.Abdul Careem Friday, 18 November 2011 03:24 PM

    As I am a recently past out Peradeniya University graduate and I did my A/L in மருதமுனை. so I know well about South Eastern university situation. There is no student who does not involve in Raging (May be 1 or 2 student who don't involve in raging for whole university, but it is also very rare).

    Reply : 0       0

    fazal Friday, 18 November 2011 06:09 AM

    போடோஸ்கள உற்று பாருங்க யாரு ஆர்பாற்றம் பண்றாங்க யாரு பலாத்காரமா அதற்கு கொண்டு வரப்பட்டு இருக்காங்க என்று நல்லாவே தெரியும். உண்மையா சொல்லுங்க இந்த போடோக்களில யாரு புதிய மாணவர்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா? அவர்களின் முகங்களில் இருக்கிற பயம் விளங்க இல்லையா?

    Reply : 0       0

    fazal Friday, 18 November 2011 05:55 AM

    ஸ்ரிளின்கா அப்பிடின்னா அந்த 4 மாணவர்களையும் இவர்கள் அடையாளம் காட்டலாம் தானே? செய்யும் பொது பார்த்துட்டு தானே இருந்தாங்கள்? இந்த யுனிவர்சிடில இந்த நிலைமை நாங்க கேள்விப்படவில்ல இதற்கு முன்னால. எல்லாம் மாறிட்டு.

    Reply : 0       0

    rishan Friday, 18 November 2011 03:47 AM

    idu ellam theveyi thana? vandomma padichchoma, nattukku sevayi senjomma yendru irukkanum. 2008 naan ruhuna science poyi ippa out avitten anga rag um illa.

    Reply : 0       0

    UMMPA Thursday, 17 November 2011 08:11 PM

    உங்களை படிப்பித்து கலாசாலை அனுப்புவதுக்கு எங்கள் வாழ்வின் கடைசிப்பக்கம் தொடங்கிவிடும். அதக்குள் நீங்கள் உங்களின் தொல்லை வேற. அதக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை கெஞ்சி மன்றாடி உங்களை வெளியே எடுக்கவேண்டும் . இதக்கு நிருவாகத்தினர் எங்களை - அம்மா அப்பாக்களை அழைத்து இதுபற்றி அறிவியுங்கள். படித்த முட்டாள்களை நாங்கள் பார்த்துகொள்கிறோம் .

    Reply : 0       0

    Pottuvilan Friday, 18 November 2011 01:58 AM

    இவங்களுக்கு முதலாம் ஆண்டு முதல் இலவசமாக படிப்பததக்கு எல்லாவற்றையும் வழங்க வரிகட்டி உதவி செய்த பாமரனுக்கு இவர்கள் செய்யும் உதவி இதுதான்?

    Reply : 0       0

    fazal Friday, 18 November 2011 12:39 AM

    பொல்லா கொடுத்து அடி வாங்கின கத தான் . இன்னும் கிண்டி பார்த்தா நாறும் எங்கட எதிர்கால புத்திஜீவிகளின் கத . படிப்ப தவிர மற்ற எல்லாத்தையும் செய்றாங்க. பாவம் உம்மா வாப்பா மார்.

    Reply : 0       0

    Mohammed Hiraz Thursday, 17 November 2011 10:20 PM

    சீ சீ.. வெக்கம் இல்லை உங்களுக்கு செய்வதைய்யும் செய்து விட்டு மாட்டுபட்ட உங்கள் சகபாடிகளுக்கு நீங்களும் கண்டித்து புத்தி சொல்வதைவிடுத்து, இப்படி நல்ல முடிவை எடுத்துள்ள நிர்வாகத்தையா போர்கொடி தூக்கி கண்டிக்க முனைவது??? மாணவ பிரதிநிதிகளாகிய நீங்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தடையாக உள்ள இந்த பகிடிவதை என்ற மிருகவதையை விட கொடிய வதையை ஒழிக்க பாட படுங்கள். அதை விடுத்து வதை செய்வோருக்கு வக்காலத்து வாங்காதீர்கள்.

    Reply : 0       0

    porali Thursday, 17 November 2011 09:42 PM

    பகிடிவதை செய்பவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்புங்கள்....

    Reply : 0       0

    kalmunaiyaan Thursday, 17 November 2011 09:41 PM

    பகிடிவதை செய்தவர்களை டிஸ்மிஸ் பண்ணுங்கள்

    Reply : 0       0

    usair Thursday, 17 November 2011 09:14 PM

    மாணவர்களின் போராட்டம் நியாயமானது. ஆகவே நிருவாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Reply : 0       0

    saja Thursday, 17 November 2011 09:07 PM

    படிக்காம பகிடிவதையும் ஆர்ப்பாட்டமும் எப்ப அய்யா நாங்க முன்னேறுவது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .