2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

89,000 விதவைகளுக்கு சுயதொழில் முயற்சிக்கான உதவி

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக கணவனை இழந்த 89,000 விதவைகளுக்கு சுயதொழில் முயற்சிக்கான உதவிகளை வழங்க சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் நிதயுதவி மூலம் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்தின் கீழ் விதவைகளுக்கு சுயதொழில் முயற்சியின் மூலம் தமது குடும்ப வருமானத்தை அதிகரிப்பதற்கான வசதிகளும் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளளன.

கிழக்கு மாகாணத்தில் மட்டும் 49,000 விதவைகள் காணப்படுகின்றனர். அதிலும் மட்டக்களப்பு பிரதேசத்தில் 25,000 விதவைகள் காணப்படுகின்றனர். இதில் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 12,000 பேரும் 3 குழந்தைகள் உள்ளவர்கள் 8,000 பேரும் அடங்குகின்றனர்.

விதவைகளின் நலன்கருதி இத்திட்டத்தினை மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

இரண்டாவது கட்டமாக வடக்கு மாகாணத்திலுள்ள வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X