2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அக்கரைப்பற்று பிரதேச சபை வளாகத்தில் அறுவடை விழா

Editorial   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

அக்கரைப்பற்று பிரதேச சபை வளாகத்தில் செய்கை பண்ணப்பட்ட கத்தரி, தக்காளி மற்றும் மிளகாய் ஆகியவற்றை அறுவடை செய்யும் நிகழ்வு, நேற்று (4) இடம்பெற்றது.

இதன்போது அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாசீக், அட்டாளைசை்சேனை பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர், அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஏ.எம்.ஹபிறு றகுமான் உட்பட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டு அறுவடை மேற்கொண்டனர்.

இரசாயனங்களும், பீடைநாசினிகளும் பயன்படுத்தாமல், நஞ்சற்ற உணவினை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கமும், விவசாய திணைக்களமும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

மேற்படி கருத்திட்டத்திற்கமைவாகவே அக்கரைப்பற்று பிரதேச சபை வளாகத்தில் அதன் ஊழியர்களினால் தக்காளி, கத்தரி, மிளகாய் என்பன பயிரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X