2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அடுத்த வாரத்தில் விசேட பிரிவு வரும்’

Editorial   / 2018 மே 29 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்

கல்முனைப் பிராந்தியத்திலுள்ள ஏழு ஆதார வைத்தியசாலைகளிலும் எச்.ஐ.வி. தொற்றை இனங்காண்பதற்கான ரெபிட் டெஸ்ட் எனும் விசேட பரிசோதனை பிரிவுகள், அடுத்த ஒரு சில தினங்களில் இயங்க ஆரம்பிக்கும் என, அப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டளவில், எச்.ஐ.வி இல்லாத நாடாக இலங்கையை மாற்றியமைப்பதற்காக சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள விசேட திட்டத்தின் பிரகாரமே கல்முனை வடக்கு, அஷ்ரப் ஞாபகார்த்த, அக்கரைப்பற்று, நிந்தவூர்,  சம்மாந்துறை, பொத்துவில், திருக்கோவில் ஆகிய வைத்தியசாலைகளில் இப்பரிசோதனை பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, இவ்வைத்தியசாலைகளின் அதிகாரிகளுக்கு கடந்த வாரம் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டு, குறித்த பரிசோதனை தொடர்பான விளக்கங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் இதன்போது ரெபிட் டெஸ்ட் பரிசோதனைக்கான வழிகாட்டி கையேடு மற்றும் ஆவணங்கள் வழங்கி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .