2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

‘அழிக்கம்பை கிராம மக்களுக்கு அடிப்டை வசதிகள் வழங்கப்படும்’

எஸ்.கார்த்திகேசு   / 2018 ஜனவரி 08 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஆதிவாசிகள் வாழும் கிராமமான அழிக்கம்பை கிராமத்திலுள்ள மக்களின் அப்படைப் பிரச்சினைகளுக்கு, இந்த வருடத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமென,  அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

திருக்கோவில் புனித சூசையப்பர் தேவாலயத்தின் ஒகஸிலியம் ஆங்கில கல்வி மற்றும் கணினி நிலையத்​தை, நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

“அழிக்கம்பை கிராமத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ள அதேவேளை, இவ்வாண்டு அங்கு வாழும் மக்களுக்கான வீடுகள், குடிநீர் வசதிகள் மற்றும் ஏனைய அபிவிருத்திகளையும் செய்து கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளேன்.

“அழிக்கம்பை கிராமத்தில் சுமார் 3 இலட்சம் ரூபாய் செலவில் முன்பள்ளி நிலையம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

“மேலும், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கணினி மற்றும் ஆங்கில கல்வி அறிவை மேம்படுத்தம் நோக்கில், இந்த நிலையத்துக்குத் தேவையான கணினிகளைப் பெற்றுத் தருவதுடன், எமது எதிர்கால  சந்ததியினர் சிறப்பாக வாழ்வதற்கான என்னால் முடிந்த உதவிகளை வழங்குவேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .