2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் கழிவு நீர்த் தொகுதியை அமைக்க நடவடிக்கை

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஜூலை 10 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரிய நீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில், கழிவு நீர்த் தொகுதியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, இன்று (10 ) தெரிவித்தார்.

கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பின் வேண்டுகோளின் பிரகாரம், அரச தொழில் முயற்சி, கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஆலோசனையின் பேரில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதன் பிரகாரம், பெரிய நீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் கழிவு நீர்த் தொகுதியை அமைப்பதற்கான பொறிமுறைத் திட்டத்தை விசேட தொழில்நுட்பங்களுடன் தயாரித்து, பூர்வாங்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளரை நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல் அறிவுறுத்தியுள்ளார்.

இத்திட்டத்துக்கான நிதியை, அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சின் இந்த ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்வதற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் 14 நாட்களுக்குள் மேற்படி திட்ட வரைவு ஆவணங்களை தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதிக்காக சமர்பிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .