2024 மார்ச் 28, வியாழக்கிழமை

காஞ்சிரம்குடா நினைவேந்தலுக்கு அழைப்பு

எஸ்.கார்த்திகேசு   / 2017 ஒக்டோபர் 07 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த தமிழ் இளைஞர்கள் 7 பேரின் நினைவேந்தல் நிகழ்வு, உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் முன்பானவுள்ள நினைவுத் தூபியில் எதிர்வரும் திங்கட்கிழமை (09) காலை இடம்பெறவுள்ளதாக, அவ்வொன்றியத்தின் பொதுச் செயலாளர் ஆ.ஜேன்சன் மற்றும் மட்டு/அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.கரன் ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2002ஆண்டு 10 மாதம் 09ஆம் திகதி காஞ்சிரம்குடா இரானுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது இராணுவத்தினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 7 தமிழ் இளைஞர்கள் கொள்ளப்பட்டு இருந்தனர்.

இவ் ஏழு இளைஞர்களின் உடல்களும் வீதி ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக் முன்பாகவுள்ள கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்துக்கு அண்மையில் அடக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.

பின்னர் இவர்களின் நினைவாக 2004.10.09 அன்று நினைவுத் தூபி அமைக்கப்பட்டு, பெற்றோர்களாலும், கிராம மக்களாலும் நினைவேந்தல் பூசைகள் இடம்பெற்று இருந்தன.

இந்நிலையில், இந்த நினைவேந்தல் நிகழ்வானது 13 வருடங்களின் பின்னர் மீண்டும் நினைவாலயம் புணரமைப்புப்  பணிகளை மேற்கொண்டு உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரையும் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆத்ம சாந்தி வேண்டிய பிரார்த்தனைகளை செய்யுமாறு உலக தமிழ் மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X