2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குப்பை வீசப்படுவதை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 மே 17 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது பிரதேசத்தில், பொது இடங்களிலும் வீதிகளிலும் குப்பைகள் போடப்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, அடையாளப்படுத்தப்பட்ட சில இடங்களில் குப்பைகள் சேகரிக்கும் உழவு இயந்திரப் பெட்டிகளைத் தரித்து வைப்பதற்கு, கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பின் ஆலோசனையின் பேரில், மாநகர சபை சுகாதாரப் பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையின் முதற்கட்டமாக, சாய்ந்தமருது பொது நூலகத்துக்கு அருகில், இன்று (17) முதல் பெட்டியொன்று தரித்து வைக்கப்பட்டுள்ளது.

இப்பெட்டியினுள் சேரும் குப்பைகள், தினசரி அகற்றப்படும் எனவும், பொதுமக்கள் தமது வீடுகளில் அன்றாடம் சேர்கின்ற உணவுக் கழிவுகளை மாத்திரம், இப்பெட்டியினுள் போடுமாறும், வேறு பொது இடங்களிலும் வீதிகளிலும் குப்பைகளை வீசுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏனை பிளாஸ்டிக், கண்ணாடி, இலத்திரனியல் கழிவுகளை, தமது வீடுகளில் சேகரித்து வைத்து, மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்கள் வரும்போது ஒப்படைக்குமாறு, ஆணையாளர் அந்த வேண்டுகோளில் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .