2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி தலைமையில் மட்டக்களப்பில் தேசிய கூட்டுறவு தினம்

Editorial   / 2018 ஜூலை 04 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 96வது தேசிய கூட்டுறவு தின நிகழ்வு சனிக்கிழமை (07) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மக்களின் சமூக, பொருளாதார, கலாசார அபிவிருத்திக்காக பாரிய பங்களிப்பு செய்யும் கூட்டுறவுத்துறையை பாராட்டி நினைவுகூரும் நோக்கில் சர்வதேச கூட்டுறவு ஸ்தாபனம் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதலாவது சனிக்கிழமையை சர்வதேச கூட்டுறவு தினமாக பிரகடனப்படுத்தியது.

1922ஆம் ஆண்டு சர்வதேச கூட்டுறவு தினம் முதல் தடவையாக அனுஷ்டிக்கப்பட்டது.  இதனை முன்னிட்டு இடம்பெறும் தேசிய வைபவம் மட்டக்களப்பு வெபர்  விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பி.ப 2.00 மணிக்கு நடைபெறும். நாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வர்.

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர்  ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம ஆகியோரது பங்கு பற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .