2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தேக்கை மரங்களுடன் சாரதி கைது

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 மே 27 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை வாகனேரிப் பிரதேசத்திலிருந்து ஓட்டமாவடிப் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட சட்டவிரோதத் தேக்கை மரங்களை ஏற்றி வந்த வாகனத்தை கைப்பற்றியதுடன், அதன் சாரதியையும் நேற்று (26) வாழைச்​சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விசேட பொலிஸ் குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, வாகனேரி பிரதான வீதியில் வைத்து குறித்த வாகனமும் தேக்க மரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.சிவதர்சன் தலைமையிலான குழுவினர்களின் நடவடிக்கையையடுத்தே, பதினொரு தேக்கை மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோத மரங்கள் கடத்தப்படும் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், விசேட பொலிஸ் குழுவினர் இரவு பகலாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.சிவதர்சன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில், சட்ட விரோத மரங்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதைத் தடுக்கும் வகையில், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X