2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘நல்லாட்சி அரசாங்கம் காயப்படுத்தியுள்ளது’

எஸ்.கார்த்திகேசு   / 2018 ஜூன் 14 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத விவகாரங்களுக்கான பிரதியமைச்சராக, இந்து மதத்தவர் ஒருவரை நியமிக்காமல், வேறு இனத்தவர் ஒருவரை நியமித்ததை எதிர்த்து, அம்பாறை மாவட்ட இந்து நிறுவனங்களின் ஒன்றியம், ஆர்ப்பாட்டமொன்றை நேற்று (13) மாலை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், நந்திக் கொடியை ஏந்தியவாறு, சுலோக அட்டைகளைப் பிடித்துக்கொண்டு தமது எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிக்காட்டியிருந்தனர்.

“தமிழ் மக்கள், நல்லாட்சி மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்நிலையில், ஜனாதிபதி, ஓர் இனத்தின் மத, கலாசார பாராம்பரியங்களை மேம்படுத்தும் பொறுப்பை, வேறு இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவது என்பது, எந்தவகையில் நியாயமான செயலாக அமையக்கூடும்?” என, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கேள்வியெழுப்பினர்.

அத்துடன், “பொறுப்புவாய்ந்த அரசாங்கத்தின் இச்செயற்பாடு, இந்துக்களின் மனங்களைக் காயப்படுத்தவதுடன், இன, மத, கலாசார ரீதியில் மேலும் இந்த நாட்டை சிக்கலாக்கும் நிலைமையைத் தோற்றுவிக்க கூடும்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .