2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நல்லாட்சி அரசு தமிழருக்கு எதனையும் செய்யவில்லை

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

 நல்லாட்சி அரசாங்கம் இதுவரைக்கும் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மைகளையும் செய்யவில்லையென கல்முனை சுபத்ரா ராமய விஹாராதிபதி  ரன்முத்துகல சங்கரத்ன தேரர்  கல்முனை சுபத்ரா ராமய விஹாரையில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையில் கூறிய அவர், தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு,  ஏமாற்றத்தை வழக்கும் விதமாக  ஒருபோதும் செயற்பட கூடாது . தமிழ் மக்களது மனதிலிருக்கும் ஏக்கங்களையோ கவலைகளையும் கண்டுவிட்டு  பாராமுகமாக இருக்கின்றார்கள் என்ற காரணம் மாத்திரம் எங்களுக்கு புரிகிறது.என்று தெரிவித்த அவர்,  தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கடந்த மூன்று தசாப்தங்களாக   ஏமாற்றி இன்றுவரை ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் சுப இலாபங்கங்களுக்காகதான் இருக்கிறார்களே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கில்லை எனவும் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு   உப பிரதேச  செயலகத்தை உரிய முறையில் தரமுயர்த்த கோரி   உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த கல்முனை சுபத்திரா ராமய விஹாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கு மாகாண இந்துக்குருமார் அமைப்பின் தலைவர் க.கு.சச்சிதானந்தம் சிவம் குருக்கள், பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் ஒன்றியங்களின் தலைவர் கிருஸ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் ஆகியோர்  இணைந்த ஊடக சந்திப்பொன்றை    புதன்கிழமை  (10)  மாலை  கல்முனை சுபத்ரா ராமய விஹாரையில்  நடாத்தினர்.

  இதன்போது கருத்து தெரிவித்த     சச்சிதானந்தம் சிவம் குருக்கள்:

 கையாலாகாதவர்கள் அரசியல் மேடைகளில் ஏறி, தங்களுடைய சுயலாபங்களை சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்களே தவிர மக்களுடைய தேவைகளை   நினைக்கவில்லை. தங்களுடைய சுய தேவைகளுக்காக மக்களை நாடிச்செல்லும் பசுத்தோல் போர்த்திய புலிகளாக வாக்குகளை பெற நடிக்கிறார்கள்.  அரியாசனம் ஏறிய பிறகுதான் இவர்களுடைய சுயரூபங்கள் வெளிவருகின்றன என்றார். 

பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் ஒன்றியங்களின் தலைவர் கிருஸ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் :

தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை யானைபோல் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்,  1978 வட்டுக்கோட்டை தொடக்கம் இன்றுவரை கூட்டமைப்பை  நம்பிக்கொண்டிருக்கும் தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றது.

 எமது பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவில்லை எனில் அம்பாறையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கான பிரதிநிதித்துவத்தை இழப்பதோடு தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தையும் இழக்கவேண்டிவரும். எனவே இன்னும் நேரம் இருக்கிறது ஆதரவாக வாக்களிப்பதா? தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதா என்று தீர்மானிக்க என தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X