2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நில உரிமைக்கான பொறுப்புக் கூறல்; ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு நிகழ்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை மாவட்ட நில உரிமைக்கான பொறுப்புக் கூறல்; ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வு, மீனோடைக்கட்டு, அல் சக்கி மண்டபத்தில், சனிக்கிழமை (12) காலை 09 மணிக்கு நடைபெறவுள்ளதாக, காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் இணைப்பாளர் கே.நிஹால் அஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அடிப்படை மனித உரிமை மீறல்களில் பிரதான ஒன்றாக திட்டமிட்ட நிலப்பறிப்புகள் அமைந்துள்ளதாகவும் அம்பாறை மாவட்டத்தில் 4,652 குடும்பங்களினது 14,127 ஏக்கர் பரப்பளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பான முறைப்பாடுகள் தமது அமைப்புக்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில், அவற்றின் உண்மைத்தன்மைகளை ஆவண ரீதியாகவும், ஆய்வு ரீதியாகவும் பகுப்பாய்வு செய்து, காணிகளை இழந்த மக்களின் உரிமைக்காக கைகோர்த்து செயற்பட்டுவதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

அதன் ஒரு கட்டமாக, மேற்படி காணி உரிமைக்கான பொறுப்புக்கூறல் நிகழ்வில், குறித்த ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்து, அம்பாறை மாவட்ட காணிப் பிரச்சினை தொடர்பான ஆவணப் படத்தையும் திரையிடத் திட்டமிட்டுள்ளதாகவும், ஊடக அறிக்கையில் அவர் ​மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .